புது டெல்லி: லடாக்கில் LAC மீதான 1962 போருக்குப் பின்னர் நிலைமை மிகவும் மோசமானதாக இருக்கிறது என்று இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (Harsh Vardhan Shringla) தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவு செயலாளர் கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங் (Wang Yi) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடில்லியில் நடந்த உலக விவகார கவுன்சில் (Indian Council of World Affairs) கூட்டத்தின் போது, ​​இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா, 'இந்தியா தனது பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் சமரசம் செய்யாது. ஆனால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க தயாராக உள்ளது' என்று கூறினார். 


ALSO READ |  "அமைதி ஏற்பட நம்பிக்கை தேவை": சீன பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் ராஜ்நாத் சிங்


அந்த கூட்டத்தின் போது ஒரு கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவு செயலாளர் (Foreign Secretary) கூறுகையில், "இந்தியா-சீனா எல்லையில் 1962 பிறகு முதல்முறையாக சூழ்நிலைகள் மிகவும் மாறியுள்ளன. 1962 முதல் இதுபோன்ற நிலைமை உருவாகவில்லை. கடந்த 40 ஆண்டுகளில் நடக்காத சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர் என்றார்.


எல்லையில் (India-China border) இந்த அளவிலான பதற்றத்தை நாங்கள் இதுவரை காணவில்லை என்று ஷ்ரிங்லா கூறினார். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த கடினமான நேரத்தில் கூட நாங்கள் (இந்தியாவும் சீனாவும்) இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டத்தில் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கிறோம் என்றார்.


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation) கூட்டத்தில் கலந்து கொள்ள ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் வீ ஃபெங் மாஸ்கோ சென்றுள்ளனர் என்பதை உங்களுக்கு சொல்கிறோம். இரு தலைவர்களும் 2 மணி 20 நிமிடங்கள் பேசினர். 


ALSO READ |  லடாக்கில் பாங்காங் திசோ ஏரியை இந்திய படை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தது எப்படி..!!!


ஐந்து நாட்களுக்கு முன்பு பாங்கோங் ஏரியின் தெற்கு பகுதியில் இந்திய நிலப்பரப்பை சீனா (China) ஆக்கிரமிக்க முயன்றது. அதனை நமது படைகள் முறியடித்தன. இதை அடுத்து இப்பகுதியில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் பின்னர் வியாழக்கிழமை சீன பாதுகாப்பு அமைச்சர் இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.


இந்த சந்திப்பு லடாக்கின் நிலைமையை மாற்றக்கூடும் என்றும், சீனர்கள் பேச்சுவார்த்தை மட்டத்துக்கு திரும்பலாம் என்றும் இந்தியா நம்புகிறது. பல சுற்று பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகும் சீன இராணுவம் (People's Liberation Army) பாங்கோங் த்சோ மற்றும் கோக்ரா போஸ்ட் பகுதிகளில் பின்வாங்கத் தயாராக இல்லை. இதன் காரணமாக இரு நாடுகளிலும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.


எஸ்சிஓ (SEO) கூட்டத்தின் போது, ​​ராஜ்நாத் சிங் தனது உரையில் அமைதி, எஸ்சிஓ உறுப்பு நாடுகளில் ஸ்திரத்தன்மை குறித்து பேசினார், மேலும் இந்த பிராந்தியத்தில் உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், ஒருவருக்கொருவர் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு தேவை. அதேநேரத்தில்  சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு, பிரச்சனைகளை தீர்ப்பதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும் எனக்கூறினார்.