ஒரே நாளில் 20 லட்சம் கோவிட் பரிசோதனைகளை செய்து உலக சாதனை படைத்தது இந்தியா
கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா முழு முனைப்புடன் போராடி வருகிறது. இந்த போராட்டத்துக்கு மத்தியில், இந்தியா மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.
புதுடெல்லி: கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா முழு முனைப்புடன் போராடி வருகிறது. இந்த போராட்டத்துக்கு மத்தியில், இந்தியா மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியா ஒரே நாளில் 20 லட்சம் - கோவிட் -19 பரிசோதனைகளை நடத்தியுள்ளது. இது ஒரு புதிய உலகளாவிய சாதனை என்று மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தினசரி COVID மீட்புகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக ஆறாவது நாளாக தினசரி புதிய பாதிப்புகளை விட அதிகமாக இருக்கும் நேரத்தில் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டது.
"கடந்த 24 மணி நேரத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன (இந்தியாவில் ஒரே நாளில் நடத்தப்பட்ட மிக அதிக சோதனை அளவாகும் இது). அதே நேரத்தில் தினசரி நேர்மறை விகிதம் 13.31 சதவீதமாகக் குறைந்துள்ளது" என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட 20.08 லட்சம் சோதனைகள் ஒரு உலகளாவிய சாதனையாகும் ”என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் இதுவரை 32 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், இந்தியாவின் தினசரி மீட்டெடுப்புகள் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக தினசரி புதிய பாதிப்புகளை விட அதிகமாக உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 3,89,851 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
ALSO READ: Coronavirus updates: ஒரே நாளில் இந்தியாவில் 2,67,334 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த என்ணிக்கை 2,19,86,363 ஐ எட்டியுள்ளது. மேலும் தேசிய மீட்பு விகிதம் 86.23 சதவீதத்தை எட்டியுள்ளது.
இந்தியாவில் உள்ள மீட்பு எண்ணிக்கையில், 10 மாநிலங்களில்தான் 74.94 சதவீத எண்ணிக்கை உள்ளது. அதிகபட்சமாக 58,395 பேர் கர்நாடகாவில் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (52,898), கேரளா (45,926), ராஜஸ்தான் (25,160), தமிழ்நாடு (21,362), ஆந்திரா (21,274), உத்தரப்பிரதேசம் 21,108), மேற்கு வங்கம் (19,050), ஹரியானா (14,897), சண்டிகர் (12,098) என மீட்பு எண்ணிக்கைகள் உள்ளன.
இந்த நேர்மறையான போக்கைத் தொடர்ந்து, இந்தியா (India) தொடர்ந்து மூன்று நாட்களாக 3 லட்சத்துக்கும் குறைவான புதிய தொற்று எண்ணிக்கையை பதிவுசெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த தொற்று எண்ணிக்கையில், 10 மாநிலங்களில்தான் 74.46 சதவிகிதம் உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி என்ணிக்கை 33,059 ஆக பதிவு செய்யப்பட்டு, தமிழகம் (Tamil Nadu) இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மறுபுறத்தில், இந்தியாவின் சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 32,26,719 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,27,046 எண்ணிக்கையிலான சரிவு காணப்படுகிறது.
கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் சிகிச்சையில் உள்ளவர்கள் 69.02 சதவீதமாக உள்ளனர்.
ALSO READ:தினசரி கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் தமிழ்நாடு: மத்திய சுகாதார அமைச்சகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR