Historic Village Husainiwala : பஞ்சாப் மாநிலத்தில் ஹுசைனிவாலா என்ற கிராமம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் மார்ச் 23ஆம் தேதி ஒரு பெரிய திருவிழாவே நடக்கும் எனலாம். இந்த விழாவானது ஆங்கிலேயர்களிடம் இருந்து தேச விடுதலையை கோரி போராடி, தூக்கு தண்டனை பெற்று உயிரிழந்த பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரின் நினைவாக நடத்தப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மூன்று பேரும் 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி அன்றுதான் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்கள். அந்த மூவரின் நினைவாக ஏன் ஹுசைனிவாலா கிராமத்தில் ஆண்டுதோறும் விழா நடைபெறுகிறது என்ற கேள்வி உங்களுக்கு வந்தால், அதற்கான விளக்கத்தை இங்கு காணலாம். அதுமட்டுமின்றி, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது ஹுசைனிவாலா எப்படி இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டது என்ற சுவாரஸ்ய பின்னணியைும் இதில் காணலாம்.  


சட்லஜ் நதிக்கரை ஓரம்...


குறிப்பாக, இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கும் இந்த ஹுசைனிவாலா கிராமம் என்பது வரலாற்று ரீதியாக மிக முக்கியமான பகுதியாகும். இந்த கிராமம், சட்லஜ் நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இங்குதான், பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகிய மூன்று சுதந்திர போராட்ட புரட்சியாளர்களின் உடலை ஆங்கிலேயர்கள் அடக்கம் செய்திருந்தனர். அந்த வகையில், அவரின் தியாகத்தை போற்றி அதனை நினைவுக்கூறும் வகையில்தான் இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ஆம் தேதி அன்றும் நடத்தப்படுகிறது. 


மேலும் படிக்க | நீதிமன்ற காவலில் அரவிந்த் கெஜ்ரிவால்... மக்களவை தேர்தலில் தாக்கம் இருக்குமா?


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ஆம் தேதி நடத்தப்படும் இந்த விழாவின் பெயர் ஷாகீத் மேளா என்ற அழைக்கப்படுகிறது. பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரின் தியாகத்தை நினைவுக்கூர்வதன் மூலம், இந்த மூன்று புரட்சியாளர்களின் தைரியத்தையும் தேசப்பற்றையும் வருங்கால தலைமுறையின் மனங்களில் விதைப்பதை நோக்கமாக கொண்டு இந்த விழா நடத்தப்படுகிறது. 


இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது...


இந்த விழாவின் மூலம் இந்த கிராமம் மிக முக்கிய இடமாக உருவெடுத்ததால் அதனை தக்கவைக்க பிரிவினையின்போது இந்தியா பெரும் விலை கொடுத்தது எனலாம். ஆம் பிரிவினையின் போது, இந்த கிராமத்தை இந்தியாவின் வரையறையில் சேர்ப்பதற்காக பாகிஸ்தான் நாட்டிற்கு 12 கிராமங்களை இந்தியா கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் எல்லைக்கு மிக அருகில் இருந்தாலும் இந்த கிராமம் இந்திய வரலாற்றிலும், பாரம்பரியத்திலும் வேரூன்றியது. 


பாகிஸ்தானின் கண்டா சிங் வாலா கிராமத்துடன் ஹுசைனிவாலா கிராமம் தனது எல்லையை பகிர்ந்துகொண்டுள்ளது. பாகிஸ்தானின் ஃபிரோஸ்பூர் நகரத்திற்கு மிக அருகில் இருக்கிறது. முஸ்லீம் துறவியான ஹுசைனி பாபாவின் பெயரில் இந்த கிராமம் பெயரிடப்பட்டுள்ளது. 1931ஆம் ஆண்டில் தியாகிகளின் உடல்களை ரகசியமாக தகனம் செய்வதற்காக ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட முயற்சிகளை உள்ளூர்வாசிகள் முறியடித்தனர். தொடர்ந்து மரியாதைக்குரிய வகையில் அங்கு அவர்களின் உடல் உள்ளூர்வாசிகளால் நல்லடக்கம் செய்யப்பட்டது. 


இன்று அவர்களை அடக்கம் செய்த இடம் 'பிரேரண ஸ்தல்', அதாவது ஊக்கமளிக்கும் தளமாக உள்ளது. இது இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த துணிச்சலான புரட்சியாளர்களின் ஆன்மாக்களுக்கு அடையாளமாக திகழ்கிறது.


மேலும் படிக்க | பூட்டானின் "ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போ" விருது பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ