காஷ்மீர் ராகம் பாடாம, PoK இடத்தை மொதல்ல காலி பண்ணுங்க: ஐநாவில் இந்தியா
ஐக்கிய நாடுகள் சபையில் பதிலளிக்கும் உரிமையை பயன்படுத்திக் கொண்ட, இந்திய பிரதிநிதி மிஜிட்டோ வினிட்டோ (Mijito Vinito), ஐ.நா பொதுச் சபையில் ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலையை மீண்டும் உறுதிபடுத்தினார்.
ஐக்கிய நாடுகள் (UN) சபையின் 75 வது அமர்வில், பாகிஸ்தான் (Pakistan) பிரதமர் இம்ரான் கான் (Imran khan) தனது முன் பதிவு செய்யப்பட்ட வீடியோ உரையில் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் உள் விவகாரங்கள் பற்றி குறிப்பிட்டார்.
இம்ரான் கான் தனது உரையில் இந்தியாவைப் பற்றி குறிப்பிடப்பட்டபோது, ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியா பிரதிநிதி, முதன்மை செயலாளர் மிஜிட்டோ வினிட்டோ (Mijito Vinito) முதலில், ஐநா பொதுச் சபை மண்டபத்திலிருந்து வெளியேறினார்.
பின்னர், ஐக்கிய நாடுகள் சபையில் பதிலளிக்கும் உரிமையை பயன்படுத்திக் கொண்ட, இந்திய பிரதிநிதி மிஜிட்டோ வினிட்டோ (Mijito Vinito),
ஐ.நா பொதுச் சபையில் ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலையை மீண்டும் உறுதிபடுத்தினார்.
இஸ்லாமாபாத் "மீண்டும் மீண்டும் பொய்களைக் கூறி, தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துகிறது" என்று அவர் கூறினார்.
காஷ்மீரை பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது, இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதாவது PoK மட்டுமே எஞ்சியுள்ளதாகவும், பாகிஸ்தான் சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.
'பாகிஸ்தானின் பிரதமரின் அறிக்கை, அதன் மற்றொரு ராஜ தந்திர வீழ்ச்சி என்றும், பாகிஸ்தானில் நடக்கும் சிறுபான்மையினர் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அட்டூழியங்கள், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை மறைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது என இந்திய பிரதிநிதி மிஜிட்டோ வினிட்டோ கூறினார்.
ALSO READ | Gilgit-Baltistan: புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையானது பாகிஸ்தான் நிலை..!!
காஷ்மீர் குறித்த இம்ரான் கானின் பொய்யை நிராகரித்த அதே வேளையில், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்பதை இந்தியா தெளிவுபடுத்தியது.
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த மிஸிடோ வினிட்டோ, "வெறுப்பையும் வன்முறையையும் பரப்புவதற்கு பாடுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இன்று கூறினார். ஆனால் அவர் அப்படிச் சொன்னபோது, அவர் தன்னைக் குறிப்பிடுகிறாரா? என நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை ஊட்டி வளர்க்க பாகிஸ்தான் தொடர்ந்து பணியாற்றுகிறது என இம்ரான் கானைத் தாக்கிய மிசிட்டோ, ஐ.நா. மேடையில், இன்று ஒரு தலைவர் விஷத்தைத் தூண்டியுள்ளார், பயங்கரவாதிகளுக்கு தனது நாட்டில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்பதை ஒப்புக் கொண்டார் எனக் கூறினார்.
ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி, டி.எஸ். திருமூர்த்தியும் இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.
ALSO READ | பிரிவினையில் தொலைந்தவரின் கண்ணீர் வாழ்வு....WhatsApp அழைப்பால் இணைந்தது உறவு..!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR