மத்திய அரசு ‘புவியமைப்பு தகவல் ஒழுங்குமுறை மசோதா’ தயாரித்துள்ளது. இதன் மூலம் இந்திய எல்லை வரைபடத்தை தவறாக சித்திரித்து வெளியிடுவோர்க்கு சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் இந்திய எல்லை வரைபடத்தை தவறாக சித்திரித்து வெளியிட்டு வருகின்றன. இதைத் தடுக்கும் நோக்கத்தில் வரைபட மசோதா சட்டம் இயற்றப்படுகிறது. சட்டம் இயற்றிய பின்பு இந்திய எல்லை வரைபடத்தை தவறாக சித்திரிக்கும் தனிநபரோ அல்லது அமைப்புக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.100 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.


இந்த மசோதாவுக்கு அண்டை நாடான பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது இல்லாமல் இதைத் தடுத்து நிறுத்தக் கோரி ஐ.நா.சபைக்கு கடிதம் எழுதியுள்ளது.


இதைக்குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் "விகாஸ் ஸ்வரூப்" கூறியதாவது:


இந்திய வரைபடம் தொடர்பாக சட்ட மசோதா கொண்டுவர திட்டமிட்டிருப்பது முற்றிலும் உள்நாட்டு விவகாரம். இந்த விசியத்தில் தலையிட பாகிஸ்தான் உட்பட வேற எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று இந்தியா கூறிவருகிறது. ஆனால் பாகிஸ்தான் மூன்றாம் தரப்பை ஈடுபடுத்த தொடர்ந்து முயன்று வருகிறது. இதை ஒருபோதும் நாங்கள் ஏற்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.