கறுப்பு பணத்தை ஒழிக்க லீச்டென்ஸ் டெயின் நாட்டுடன் ஒப்பந்தம்!
கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கறுப்பு பணத்தை பதுக்குவோர் குறித்த தகவல்கள் பரிமாற்று ஒப்பந்தத்தில் லீச்டென்ஸ் டெயின் நாட்டுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது!
கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கறுப்பு பணத்தை பதுக்குவோர் குறித்த தகவல்கள் பரிமாற்று ஒப்பந்தத்தில் லீச்டென்ஸ் டெயின் நாட்டுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது!
ஐரோப்பிய கண்டத்தில் ஆஸ்ட்ரியாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையில் உள்ளது லீச்டென்ஸ் டெயின் நாடு. இந்நாட்டில் 37,666 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். எனவே இங்கு வெளிநாட்டவரின் கறுப்பு பணம் புழக்கம் என்பதும் அதிகமாகவே உள்ளது.
கறுப்பு பணத்தை பதுக்குவோரின் சொர்கம் என கருதப்படும் இந்த லீச்டென்ஸ் டெயின் நாட்டின் தலைநகரான வாண்டசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரு நாட்டு அதிகாரிகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலம் அந்நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கறுப்பு பணத்தை பதுக்கினால் இந்திய அரசுக்கு உடனடியாக தகவல் கொடுக்க வழி வகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் பாஜக ஆட்சியின் வாக்குறிதிகளில் முக்கியமான ஒன்று கறுப்பு பணம் ஒழித்தல். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் காலம் தற்போது 4.5 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று சென்னை மாநில கல்லுாரியின் 178-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கறுப்பு பணம் ஒழித்தல் குறித்து பேசுகையில்...
"பட்டம் பெற்ற மாணவர்கள், ஊழல், கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் செயல்பட வேண்டும். கணக்கில் வராத கறுப்பு பணம் இருந்தால் எப்படிப்பட்ட மெத்தையில் படுத்தாலும் நல்ல துாக்கம் வராது. பணத்தை காப்பாற்ற வேண்டிய கவலையும், பயமும் இருக்கும். எனவே கறுப்பு பணத்தை ஒழிப்பது வரும் தலைமுறையினர் கையில் தான் உள்ளது என குறிப்பிட்டார். மேலும் மாணவர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்காமல் அவற்றை உருவாக்கும் தொழில் முனைவோராக மாற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்!
இந்நிகழ்ச்சியில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார், எத்திராஜ் கல்லுாரி நிர்வாகக் குழு தலைவர், முரளிதரன், நிதி அறங்காவலர், நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.