கொலம்போ: இலங்கையின் எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதிக்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகம் ஆலோசனை உதவியை வழங்கியுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக உயர் ஆணையம் தெரிவித்துள்ளது. "உயர் ஆணையம் @CGJaffna மூலம் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு தூதரக அணுகல் வழங்கப்பட்டது மற்றும் அவர்களுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவும் வழங்கப்படும். அவர்களுக்கு அத்தியாவசிய தினசரி பயன்பாட்டு பொருட்கள் வழங்கப்பட்டன மற்றும் சட்ட மற்றும் பிற வகையான உதவிகளும் வழங்கப்படுகின்றன” என ஒரு ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது.



இந்தியாவும் இலங்கையும் (Sri Lanka) புதன்கிழமை வீடியோ கான்பரன்ஸ் மூலம் மீன்வளம் தொடர்பான கூட்டு பணிக்குழுவின் கூட்டத்தை நடத்தின. இதில் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் COVID-19 தொற்றுநோயால் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.


ALSO READ: ஆரோக்கியமே செல்வம் என்பதை 2020 நமக்கு உணர்த்தியுள்ளது: பிரதமர் மோடி


"இந்தியா-இலங்கை உறவுகளுளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் நான்காவது கூட்டு பணிக் குழு கூட்டம் வழக்கமான சுமுகமான முறையில் நடைபெற்றது. கூட்டத்தின் போது நடந்த கலந்துரையாடல் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவியது" என்று உயர் ஆணையம் புதன்கிழமை ட்வீட் செய்தது.


இரு நாடுகளிலிருந்தும் மீனவர்கள் (Fishermen) கவனக்குறைவாக மற்ற நாடுகளில் எல்லைக்குள் சென்று விடுவதால், அவர்கள் கைது செய்யப்படுவது அடிக்கடி நடக்கும் ஒரு விஷயமாகும்.


பிப்ரவரியில் தனது ஐந்து நாள் இந்தியா (India) பயணத்தின் போது, ​​இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் (Narenra Modi) நீண்டகாலமாக நீடிக்கும் மீனவர்கள் பிரச்சினையை "மனிதாபிமான அணுகுமுறையுடன்" தீர்க்க ஒப்புக்கொண்டனர்.


ALSO READ: ஜனவரி 2 முதல் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி ஒத்திகை: மத்திய அரசு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR