எம்.எஸ். சுவாமிநாதன் குழு அறிக்கையின்படி விவசாயிகளுக்கு காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகள்
Congress Five Guarantees for Farmers: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது நாசிக்கில் நடந்த பேரணியில் விவசாயிகளின் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும் விவசாயிகளுக்கு 5 வாக்குறுதிகளையும் அளித்தார்.
Rahul Gandhi Bharat Jodo Nyay Yatra: பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் ஒருபகுதியாக நாசிக்கில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசும், விவசாயிகளின் பிரச்சனைகளை மேற்கோள்காட்டி மோடி அரசை கடுமையாக தாக்கினார். தற்போது நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை பற்றி மோடி அரசு விவாதிப்பதே இல்லை எனக் கூறினார். விவசாயிகளை பார்த்து கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் அரசு உங்களுக்கு எவ்வளவு கடன் கொடுத்துள்ளது? எவ்வளவு மன்னிக்கப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பினார்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள சந்த்வாட்டில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ நியாய யாத்ராவின் ஒரு பகுதியாக, என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் ஆகியோருடன் விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்பொழுது அவர், "இந்திய கூட்டணி" விவசாயிகளின் குரலாக இருக்கும் மற்றும் அவர்களின் நலன்களைப் பாதுகாக்க பாடுபடும். என்னுடைய மற்றும் எங்கள் (இந்திய கூட்டணி) அரசாங்கத்தின் கதவுகள் விவசாயிகளுக்காக எப்போதும் திறந்தே இருக்கும்" என்றார்.
விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மறுசீரமைப்பு, விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கைகளை வகுத்து பயிர்களின் விலையைப் பாதுகாக்கவும், விவசாயத்தை ஜிஎஸ்டியிலிருந்து விலக்கி ஒரே வரியில் செயல்பட முயற்சி மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உறுதியளித்தார்.
சுவாமிநாதன் குழு அறிக்கையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும் என்ற காங்கிரஸின் வாக்குறுதியை மீண்டும் விவாசயிக்கள் முன் வலியுறுத்தினார்.
நாட்டின் மக்கள் தொகையில் 70 கோடிக்கு சமமான சொத்து நாட்டில் உள்ள 20 முதல் 25 பேர்களிடம் மட்டுமே இருப்பதாக கூறிய அவர், தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை நரேந்திர மோடி அரசு தள்ளுபடி செய்தது. ஆனால் விவசாயிகளின் கடன் தள்ளுப்படி செய்யவில்லை என்றார்.
ஆனால் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விவசாயிகளின் ரூ.70,000 கோடி கடனை தள்ளுபடி செய்தது என்றார்.
மேலும் நமது நாட்டின் எல்லைகளைக் காக்கும் வீரர்களைப் போல, விவசாயிகளும் நாட்டிலுள்ள குடிமக்களைப் பாதுகாக்கிறார்கள். நமது ஜவான்களையும் கிசான்களையும் நாம் பாதுகாக்காவிட்டால், நாடு முன்னேற முடியாது என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க - வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் - அறிவித்த ராகுல் காந்தி... அதிர்ச்சியில் பாஜக!
விவசாயிகளுக்கு காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளை என்ன?
- விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க சட்டம் இயற்றப்படும்
- விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு அளிக்கப்படும்
- விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நிரந்தர ஆணையம் அமைக்கப்படும்
- பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 30 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும்
- விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய வேளாண் பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கை உருவாக்கப்படும்
மேலும் படிக்க - வயநாடில் போட்டியிடும் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணியில் பதற்றம்: காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ