அக்டோபர் ஏழாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளார். எந்தவித இடைவெளியும் இல்லாமல், இன்றோடு, அரசாங்க ஆட்சிப்பொறுப்பை நடத்தும் 20 ஆவது ஆண்டில் அவர் நுழைகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் பாஜக-வில் உட்பூசல்கள் அதிகமாக இருந்த காலம் அது. அப்படி ஒரு இக்கட்டான நேரத்தில், நரேந்திர மோடி, கட்சியால் குஜராத்தின் முதமைச்சராக நியமிக்கப்பட்டார். கட்சியை வலுப்படுத்த பிரதமர் மோடி தான் குஜராத் முதல்வராக இருந்த 3 பதவிக் காலங்களையும் நன்கு பயன்படுத்தினார். மேலும், மத்தியிலும் காங்கிரஸின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர பாஜகவுக்கு உதவுவதில் பெரும் பங்கு வகித்தார்.


புஜ் (Bhuj) நகரை உலுக்கிப்போட்டு, பேரழிவுவை ஏற்படுத்திய பூகம்பத்திற்குப் பிறகு, அக்டோபர் 7, 2001 அன்று குஜராத் முதல்வராக மோடி பொறுப்பேற்றார். இருப்பினும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவ துரித வேகத்தில் அவர் பல நடவடிக்கைகளை எடுத்தார். மோடியின் தலைமையின் கீழ், குஜராத் பல முனைகளில் தன்னிறைவு பெற்றது. மேலும் 'குஜராத் மாடல்' நாடு முழுவதும் பிரபலமானது. குஜராத் (Gujarat) முதல்வராக பிரதமர் மோடி செய்த பிரம்மாண்டமான அபிவிருத்திப் பணிகள் நாடு முழுவதும் குஜராத்தின் புகழை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்தன. இவற்றின் மூலம் மோடியின் புகழும் நாடு முழுவதும் பரவியது. மோடியின் பரவும் புகழ் மற்றும் ஆளுமையை 2014 ல் நடந்த மக்களவைத் தேர்தலின் போது பாஜக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது.


2007 ஆம் ஆண்டில், மோடி இரண்டாவது முறையாக குஜராத் முதல்வராக பதவியேற்றார். அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக 2012-லும் முதல்வரானார். மக்களவைத் தேர்தலில் பாஜக (BJP) பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, 2014 ல் மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றார். 2019 ஆம் ஆண்டில், பிரதமர் மோடி (PM Modi) தலைமையிலான அசுர பிரச்சாரத்தின் மூலமும், முந்தைய ஆட்சிக்காலத்தில் செய்திருந்த பல நலத்திட்டங்களின் விளைவாகவும், இரண்டாவது முறையாக பாஜக-வுக்கு மகத்தான வெற்றி கிடைத்து, பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்றார்.


ALSO READ: நேர்மையாக வரி செலுத்துவோர் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேறும்: பிரதமர் மோடி


தேசிய அளவிலான முதலீட்டாளர் உச்சிமாநாடு என்ற கருத்தே இந்தியாவுக்குத் தெரியாதபோது, ​​மோடி 2003 இல் ‘Vibrant Gujarat முதலீட்டாளர் உச்சிமாநாட்டைத்’ தொடங்கினார். இதேபோல், பிரதமரான பிறகு, மோடி அன்னிய நேரடி முதலீட்டை அதிகப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளார்.


மோடி செய்யும் செயல்களையும் எடுக்கும் நடவடிக்கைகளயும் பார்த்தால், அவர், தனக்கான சவாலாக, தனக்கான போட்டியாளராக தன்னையே நினைத்துக் கொள்கிறார் என்றுதான் தோன்றுகிறது. அதனால்தான் அவரால் 20 ஆண்டுகளாக ஒரு பிரபலமான தலைவராக இருக்க முடிந்துள்ளது என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.


சாத்தியமற்றதாகத் தோன்றும் இலக்குகளை நிர்ணயித்து அவற்றை சாதித்துக் காட்டுவதிலும், பல அபாயங்களை எதிர்த்துப் போராடுவதிலும், பிரதமர் மோடிக்கு நல்ல பழக்கம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் இவற்றின் பின்னால் இருப்பது அவரது அயராத உழைப்பு. இந்த உழைப்பும் விடா முயற்சியும்தான் அவரை மற்ற தலைவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது, தனித்துவப்படுத்துகிறது.


தலைவன் தன்னலமற்றவனாக இருந்தால் நாடு தலைதூக்கும். தலைவன் நிகரற்றவனாக இருந்தால், மற்ற நாடுகளின் பார்வை அதன் மேல் படும். தலைவன் உறுதியோடு இருந்தால் நாடு உலகை ஆளும். இப்படி ஒரு தலைவனாக நரேந்திர மோடி (Narenrda Modi) இந்தியாவுக்குக் கிடைத்திருப்பதால், நம் நாடும் நாளை உலகை ஆளும் என தாராளமாக நம்பலாம், நம்புவோம்!!


ALSO READ: தமிழக மாணவியுடன் போனில் உரையாடிய பிரதமர் மோடி....யார் அந்த மாணவி


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR