அதிரடியாக உயர்ந்தது பயணிகள் ரயில் கட்டணம்! இன்று முதல் அமல்
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் ரயில் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக ரயில் கட்டணங்களை உயர்த்துவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது!
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் ரயில் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக ரயில் கட்டணங்களை உயர்த்துவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது!
செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் ரயில்வே அமைச்சகம் பயணிகளின் அடிப்படை கட்டணத்தை உயர்த்த உத்தரவிட்டது, இது இன்று
9 ஜனவரி 1 ஆம் தேதி) முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.
"2021 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் அடிப்படை பயணிகள் கட்டணத்தை திருத்துவதற்கு ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது" என்று செவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட்ட உத்தரவு புதிய கட்டணம் நடைமுறைக்கு வரும் என்று கூறி பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அறிவிப்பின் படி சாதாரண AC அல்லாத ரயில்களுக்கு கி.மீ.க்கு 1 பைசா, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு கி.மீ.க்கு 2 பைசா (AC அல்லாத கோச்) மற்றும் AC வகுப்புகளில் பயணம் செய்ய கி.மீ.க்கு 4 பைசா என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
"ராஜ்தானி, தத்தாபி, டுரான்டோ, வந்தே பாரத், தேஜாஸ், ஹம்சாஃபர், மகாமனா, கதிமான், அந்தியோடயா, கரிப் ராத், ஜான் சதாப்தி, ராஜ்ய ராணி, யுவா எக்ஸ்பிரஸ், சுவிதா மற்றும் சிறப்பு ரயில்களிலும் இந்த சிறப்பு கட்டணங்கள் பெறுந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது AC MEMU (புறநகர் அல்லாதது), AC DEMU (புறநகர் அல்லாதது) இதேபோல் அறிவிக்கப்பட்ட கட்டண அட்டவணையின்படி வர்க்க வாரியான கட்டணத்தில் மேலே குறிப்பிடப்பட்ட அதிகரிப்பு அளவிற்கு திருத்தப்படும், என்று இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே மீதான கடைசி கட்டண திருத்தம் 2014-15 ஆம் ஆண்டில் செய்யப்பட்டது. அதன்பிறகு, off-board மற்றும் on-board வசதிகளின் நிலையான தரம் மற்றும் விரிவாக்கம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ரயில்வே ரயில் பெட்டிகளுக்கான நவீனமயமாக்குதல் மற்றும் நிலையங்களில் மேம்பட்ட வசதிகளை வழங்குவதன் மூலம் பயணிகளின் அனுபவத்தை அதிகரிக்க இந்திய ரயில்வே தொடர்ந்து முயன்று வருகிறது. மேலும், இந்திய ரயில்வேயில் 7-வது ஊதியக்குழுவின் சுமை கட்டணங்களை பகுத்தறிவு செய்வதற்கு அவசியமாக்கியுள்ளது என்றும் ரயில்வே அமைச்சகம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.