அலுவல் முறையில் செல்லும்போது ரெயில்வே அதிகாரிகள் அடிக்கடி ரெயிலில் பயணம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என ரெயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் யாதவ் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக ரெயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் யாதவ் அனைத்து மண்டல ரெயில்வே பொதுமேலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது., 


நமது சேவைகளுக்கு கிடைக்கும் மரியாதையை பற்றி அறிந்துகொள்வதற்கு ரெயிலில் பயணம் செய்வது தான் சிறந்த வாய்ப்பாக இருக்கும். 


நமது வாடிக்கையாளர்கள், பயணிகள் மூலமாக நம்மாள் பல தகவல்களை அறிந்துகொள்ள முடியும். இதன்மூலம் நமது சேவைகளை மேம்படுத்தவும், புதிய சேவைகளை சேர்ப்பதற்கான ஆலோசனையும் நமக்கு கிடைக்கும்.


அனைத்து பொதுமேலாளர்கள், கோட்ட ரெயில்வே மேலாளர்கள், பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் தங்களின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள் அலுவல் முறையில் செல்லும்போது அடிக்கடி ரெயிலில் பயணம் செய்வதை உறுதி படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அவர்களின் பயணத்தின் போது அவர்கள் ரெயில் பெட்டிகளின் தரம், உயிரி தொழில்நுட்ப கழிவறை, உணவின் தரம் ஆகியவைகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை தரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதிகாரிகள் தரும் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குறைகளை சரிசெய்ய துறை தலைவர்களுக்கு பொதுமேலாளர் உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.