இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

 

ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே இயக்கத் திட்டமிடப்பட்டது. தற்போது அதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. 

 

இந்த விழாவில் இந்திய பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் கலந்து கொள்கின்றனர். இதனையடுத்து அகமதாபாத் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாயொட்டி அகமதாபாத் முழுவது விழாகோலம் பூண்டுள்ளது.

 

மும்பை - அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டம் ரூ 1.1௦ லட்சம் கோடியில் உருவாக உள்ளது. இந்த திட்டம் 2023௦ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட பட்டுள்ளது.