இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டது. இருந்த போதிலும் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு அடிதளமிட்டார். மேலும் இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.


இந்நிலையில் தற்போது ஷிகர் தவானுக்கு ஏற்பட்ட காயம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகும், அடுத்த மூன்று வாரங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக எதிர்வரும் போட்டிகளில் இரந்து ஷிகர் தவான் விடபைபெறுகின்றார்.


ஜூன் மாதத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நியூசிலாந்து, பாக்கிஸ்தான், அப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைப்பெறும் போட்டிகளில் ஷிகர் தவான் இடம்பெற மாட்டார் என கூறப்படுகிறது. 


ICC உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரராக திகழும் ஷிகர் தவானின் இடைவெளி அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


எதிர்வரும் போட்டிகளில் ரோகித் ஷர்மா-வுடன் KL ராகுல் துவக்க வீரராக களமிறங்குவார் எனவும், தினேஷ் கார்தி அல்லது விஜய் சங்கர் மிடில் ஆர்டர் ஆட்டக்காரர்களாக களமிறங்குவார் எனவும் தெரிகிறது. ஷிகர் தவான் முழுமையாக உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறும் பட்சத்தில் ரிசாப் பன்ட் அல்லது ஸ்ரேயஸ் ஐயர் உலக கோப்பை தொடர் அணியில் இடம்பிடிப்பர் என கூறப்படுகிறது.