INX மீடியா வழக்கு: ப.சிதம்பரம் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!
INX மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரம் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!!
INX மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரம் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!!
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரம் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதிலளிக்கும்படி உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
INX மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதால் சிறையில் இருந்து வெளிவர முடியாத நிலை உருவானது. இதையடுத்து ப.சிதம்பரம் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்க வந்தபோது, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.