நடிகர் சந்தானம் பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவல்: ரியாக்ஷன் என்ன?
பாஜகவில் தான் இணையப்போவதாக வெளியான தகவல் நகைச்சுவையாக உள்ளது என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் மூன்று தோற்றங்களில் நடித்திருக்கும் படம் ‘பிஸ்கோத்’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களை தவிர மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் நேற்று முன்தினம் திரையரங்கில் வெளியானது. மேலும் சென்னை கமலா திரையரங்கில் பார்வையாளர்களுடன் நடிகர் சந்தானம் படம் பார்த்து ரசித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ALSO READ | ‘A1’ திரைப்படத்தில் நடித்த சந்தானம் மீது காவல்துறையில் புகார்!
“படம் பார்க்க மக்கள் திரையரங்குக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். கொரோனாவுக்குப் பின் வெளியான எனது முதல் படமான ‘பிஸ்கோத்’. தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் சென்று நன்றி சொல்ல முடியாத காரணத்தால், சென்னை கமலா திரையரங்கில் கேக் வெட்டி ஆடியன்ஸ்க்கு நன்றி தெரிவித்தேன்.
இதற்கிடையில் சந்தானத்திடம் நீங்கள் பாஜகவில் இணையப் போவதாக தகவல் உலவுகிறதே உண்மையா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தான் பாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவல் தவறானது. அப்படியான எண்ணம் எனக்கில்லை.” என்றார்.
பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் ‘பிஸ்கோத்’ திரைப்படத்தை விட காமெடியாக உள்ளது என்றார் சமதானம்.
ALSO READ | டகால்டி First Look சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சந்தானம்!