ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து DS-EO என்ற புவிகண்காணிப்பு செயற்கைகோளுடன் PSLV-C53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஓ, நியூசர் உள்பட 3 செயற்கை கோள்கள் பி.எஸ்.எல்.வி-சி53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன.  இவை பூமத்திய ரேகையில் இருந்து 570 கிமீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டன.


529 கிமீ உயரத்தில் சூரிய ஒத்திசைவான துருவ சுற்றுப்பாதையில் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை (EOS-04) செலுத்துவதன் மூலம் இந்த ஆண்டு பிப்ரவரியில் இஸ்ரோ PSLV-C52 மிஷனை வெற்றிகரமாக செலுத்திய நிலையில், தற்போது இரண்டாவது PSLV ராக்கெட் செலுத்தப்பட்டுள்ளது. 


விண்ணல் ஏவப்பட்ட நிகழ்வை கீழே காணலாம்: 



இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா



Polar Satellite Launch Vehicle C-53 (Credit: ISRO)


இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மூலம்,   தகவல் தொடர்பு, வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு தேவைகளுக்கான செயற்கை கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. மேலும், வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கை கோள்களையும், இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.


மேலும் படிக்க: நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்போம் - பெரும்பான்மையை நிரூபிக்க தயார்: ஏக்நாத் ஷிண்டே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR