துருக்கி தலைநகர் இஸ்தான்புல் தலைமை சர்வதேச விமானநிலையத்தில் 3 தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கள் உடலில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன் தன் மகன்களான ஹரேஹான் மற்றும் ஹரிதான் ஆகியோருடன் துருக்கிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தார். இன்று நாடு திரும்புவதற்காக இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு அவர் வந்திருந்தார். அவர் பயணம் செய்யவிருந்த விமானத்தைத் தவறவிட்ட நிலையில் அடுத்த விமானத்திற்காக காத்திருந்தார்.


அப்போது விமானநிலையத்தில் தற்கொலைபடை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் தாக்குதலின் போது இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்த ஹிரித்தக் மற்றும் அவரது மகன்கள் எந்த பாதிப்பும் இன்றி வேறு விமானத்தில் நாடு திரும்பினர்.


நாடு திரும்பியதும் தனக்கு உதவி செய்த இஸ்தான்புல் விமான நிலையப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இஸ்தான்புல் தாக்குதலில் இறந்தவர்கள்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.