புதிதாக வந்துள்ள 200 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் வழியாக வினியோகம் செய்ய 3 மாதங்களாவது ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வாரம் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. குறைந்த அளவிலான நோட்டுகளே புழக்கத்திற்கு வந்துள்ளன. 2,000 ரூபாய் நோட்டை சிரமம் இன்றி பொதுமக்கள் மாற்றுவதற்காக புதிய 200 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டு உள்ளது. இந்த நோட்டுகள் டெல்லி, மும்பை, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளது.


இந்நிலையில், 200 ரூபாய் நோட்டுகளை வழங்கும் வகையில் ஏடிஎம் இயந்திரங்களை மறுசீரமைக்க பெரும்பாலான வங்கிகளில் இருந்து, இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை என்று ஏடிஎம் பராமரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 


ஏடிஎம் இயந்திரங்களை 200 ரூபாய் நோட்டுகளை கொடுக்கும் வகையில் மாற்றிமைக்கும் பணிகளை தயார்படுத்தி வைக்குமாறு சில வங்கிகள் மட்டுமே கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், 200 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் கிடைக்க தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.