Jaffer Sadiq Arrested: ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இது குறித்து என்சிபி தலைமையகத்தில் சிறப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங், கைது தொடர்ப்பான விவரங்களை அளித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"ஜாபர் சாதிக்கின் கைது போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம், டெல்லி காவல்துறை மற்றும் பிற ஏஜன்சிகளின் நேர்த்தியான ஒத்துழைப்பின் பலனாகும். பல நாடுகளில் பரவியுள்ள இந்த போதைப்பொருள் நெட்வொர்க்கை அழிக்க, என்சிபி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அதிகாரிகளுடன் தொடர்ந்து கூட்டாக பணிபுரிந்து வருகிறது. கடந்த மாதம் ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் நெட்வொர்க் பற்றிய தகவல் கிடைத்து அவர்களை பிடித்தோம். அதன் தலைவன் ஜாஃபர் சாதிக்கை பிடிக்க பல சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. எங்களுக்கு கிடைத்த சில விசேஷ தகவல்களின் அடிப்படையில், தற்போது ஜாபர் சாதிக்கை கைது செய்துள்ளோம்.


மேலும் படிக்க | போலீஸாரால் கைது செய்யப்பட்ட 5 பேரை காணவில்லை... பாஜக பரபரப்பு புகார்!


ஜாஃபர் சாதிக் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தலைமறைவாக இருந்தார். அவெண்டா என்ற அவரது நிறுவனத்தில் நாங்கள் 50 கிலோ போதைப்பொருளை கைப்பற்றி 3 நபர்களை கைது செய்தோம். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் டிமாண்ட் அதிகமாக உள்ள மெதம்பெடமைன் என்ற போதைப்பொருளை செய்ய சூடோஎஃபிட்ரைன் பயன்படுத்தப்படுகின்றது. தனது நிறுவனத்திலிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதை அடுத்து தலைமறைவான ஜாபர் சாதிக்கை கைது செய்ய சிபிஐ கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. மிகப் பெரிய முயற்சிக்கு பிறகு என்சிபி மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு, பிற ஏஜன்சிகள் மற்றும் என்சிபி -இன் பிற பிரிவுகளின் உதவியுடன் ஜாஃபர் சாதிக்கை இன்று டெல்லியில் கைது செய்தோம். 


ஜாபர் சாதிக் தலைமையிலான ஒரு அமைப்பு இந்தியாவில் சூடோஎஃபிட்ரைனை வாங்கி அதை ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் நியூசிலாந்திற்கு அனுப்பி வந்தது. இதை இவர்கள் ஃபுட் கிரேட் கார்கோ அதாவது உணவு பண்டங்களுக்கான சரக்கு வகைகளில் அனுப்பி வந்தனர். ஜாபர் சாதிக் தலைமையிலான போதைப்பொருள் கும்பல் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 45 போதைப்பொருள் கன்சைன்மென்ட்களில் இதை பல நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் 3500 கிலோ சூடோஎஃபிட்ரைனை அனுப்பப்பட்டுள்ளது. 


தனது சட்டப்புறம்பான போதைப்பொருள் கடத்தல் மூலம் ஏராளமான பணத்தை சம்பாதித்ததாகவும் இந்த பணத்தை சட்டபூர்வமான பணமாக மாற்ற திரைப்பட  தயாரிப்பு, கட்டுமான பணிகள், விருந்தோம்பல் அதாவது ஹாஸ்பிட்டாலிட்டி செக்டர் ஆகியவற்றில் முதலீடு செய்ததாகவும் ஜாபர் சாதிக் ஒப்புக் கொண்டுள்ளான். 


போதைப் பொருள் கடத்தல் தொடர்பான அவரது நிதி தொடர்புகள் சார்பாக விசாரணை நடந்து கொண்டு வருகிறது. அவருக்கு பணம் கொடுத்து உதவியவர்கள் முதல் அவருடன் கொண்ட தொடர்பு மூலம் பொருளாதார ஆதாயம் பெற்றவர்கள் வரை அனைத்து தகவல்களும் விரைவில் வெளிவரும். ஜாபர் சாதிக்கை தொடர்ந்து விசாரித்து வருகிறோம். ஜாபர் சாதிக் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். அடுத்த கட்ட விசாரணைகளில் இன்னும் பல தகவல்கள் வெளிவரும்" என்று அவர் கூறினார்.


"குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதம், இனம், மொழி, கட்சி கடந்து ஜாபர் சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 


மேலும் படிக்க | பிரதமரின் 'நமோ ட்ரோன் திதி யோஜனா' திட்டத்தில் 1000 மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ