பிரதமரின் 'நமோ ட்ரோன் திதி யோஜனா' திட்டத்தில் 1000 மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சி!

பிரதமரின்  'நமோ ட்ரோன் திதி யோஜனா' திட்டத்தில் 1000 மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சி அளிக்கப்பட்டது. இது குறித்த முழு விவரம், இங்கே..  

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Mar 9, 2024, 02:33 PM IST
  • மகளிருக்கு நன்மை பயக்கும் நமோ ட்ரோன் திதி யோஜனா திட்டம்
  • 1000 பேருக்கு ட்ரோன் பயிற்சி
  • முழு விவரம், இதோ!
பிரதமரின் 'நமோ ட்ரோன் திதி யோஜனா' திட்டத்தில் 1000 மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சி! title=

உலக  மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள  அக்னி வளாகத்தில்  கருடண் விண்வெளி சார்பாக  கருடா ஏரோஸ்பேஸ் மூலம் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்து கருடா ஏரோஸ்பேஸ் அலுவலகத்தில் அதன் தலைமை செயல்பாட்டு அதிகாரி  ஷ்யாம்குமார், மற்றும் குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

ஷ்யாம்குமார், தலைமை செயல்பாட்டு அதிகாரி(கருடா ஏரோஸ்பேஸ்)

கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ட்ரோன் மூலமாக விவசாய துறையில் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தி வருவதாக தெரிவித்தார். மேலும், விவசாயத்தில் அறிவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளின் தேவைகளை மிக எளிதாக பூர்த்தி செய்து வருவதாக தெரிவித்தார்.  

இந்நிலையில், மத்திய அரசுடன் இணைந்து "நமோ ட்ரோன் திதி யோசனா" திட்டத்தின் மூலமாக இந்தியாவில் சுமார் 1000பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என தெரிவித்தார். அதில் தென்னிந்தியாவிலிருந்து கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் மூலமாக சுமார் 446ட்ரோன்கள் வழங்க இருக்கிறது. அது மட்டுமல்லாது சுமார் 500நபர்களுக்கு கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஏற்கனவே ட்ரோன் பயிற்சி அளித்துள்ளது என்றார். மேலும், தற்போது வழங்க இருக்கும் இந்த பயிற்சி மூலமாக கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.

மேலும், இந்தியா முழுவதும் வரும் மார்ச் 11ஆம் தேதி, 11இடங்களில், 1000ட்ரோன்களை பிரதமர் ட்ரோன்களை வழங்க இருக்கிறார். இந்த ட்ரோன் பயிற்சி முற்றிலுமாக இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என்றார்.

தற்போது, கருடா ஏரோஸ்பேஸ் மூலமாக சென்னையை அடுத்த நாவலூர் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஜியோ இந்தியா அறக்கட்டளையின் 'WOW Wonder Woman' விருது வழங்கும் விழா கோலாகல கொண்டாட்டம்

முதற்கட்டமாக அவர்களுக்கு அக்ரி ட்ரோன் மூலமாக ஸ்பிரே எவ்வாறு தெளிக்கப்படுகிறது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றார். இந்த பயிற்சிக்கு அவர்கள் 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.  பாஸ்போர்ட் அல்லது பேன்கார்டு அல்லது  அரசு அங்கீகார அடையாள அட்டை ஏதேனும் ஒன்று வைத்திருக்க வேண்டும். குறிப்பாக 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்,எந்தவித கட்டணமும் கிடையாது,முற்றிலும் இலவசம் என குறிபிட்டார்.

இந்த வாய்ப்பின் மூலம் பெண்களும் விவசாயத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக பார்க்கப்படுவார்கள் என்றார். தற்போது கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் மூலமாக, மேரி, லட்சுமி தேவி, ஜோதி மற்றும் சுனிதா ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

மேலும் படிக்க | போலீஸாரால் கைது செய்யப்பட்ட 5 பேரை காணவில்லை... பாஜக பரபரப்பு புகார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News