ஜம்மு-காஷ்மீருக்கு வணிகங்களை ஈர்க்கும் முயற்சியில், மாநில நிர்வாகம் மூன்று நாள் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு தலைநகர் ஸ்ரீநகரில் வரும் அக்டோபர் 12 முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் எந்த மாநாடு, ஜம்மு காஷ்மீரின் பலம், உத்திகள் மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் உண்டாக்கும் என்று மாநில முதன்மை செயலாளர் (கைத்தொழில்) நவீன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.


மேலும் இந்த மாநாடு மாநிலத்திற்கு வெளியே உள்ள வர்த்தக மற்றும் வணிக சமூகங்களின் மனதில் உள்ள அச்சங்களையும், தயக்கங்களையும் போக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரசியலமைப்பின் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் திரும்ப பெற்றது. இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகி ஒரு வாரத்திற்குள்ளாக இந்த மாநாடு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


முதலீட்டாளர்கள் சந்திப்புக்கான தேசிய கூட்டாளியாக இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (CII) இருக்கும் எனவும், ஜம்மு-காஷ்மீர் வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (JKTPO) மற்றும் CII ஆகியவை இந்த நிகழ்வின் அமைப்பு மற்றும் நிர்வாகத்திற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த மாநாடு ஆனது வர்த்தக மற்றும் தொழில்துறை நிறுவனங்கள், அரசாங்கத்தின் வணிக நட்பு கொள்கைகள் பற்றி நேரடியாக அறிந்துகொள்வது, உள்கட்டமைப்பு, இயற்கை வளங்கள், மூலப்பொருள் மற்றும் திறன் மற்றும் கிடைக்காத திறமையான மனிதவளத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் மாநிலத்தில் வர்த்தக வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்கு நல் வழி வகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இது மாநில மற்றும் வணிக சமூகத்திற்கும் உள்ளூர் மற்றும் வெளி வணிக சமூகங்களுக்கும் இடையிலான தொடர்புகளை வளர்ப்பதற்கான மகத்தான வாய்ப்புகளை அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்கள் மாநாடு ஜம்மு-காஷ்மீரில் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.