ஜம்முவில் தன் வீட்டில் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகளை, அடித்து துரத்திய, சிறுவனுக்கு,  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இன்று சௌர்ய சக்ரா விருதை வழங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த, 2017 அக்டோபரில், ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த, இர்பான் ரம்ஜான் ஷேக் வீட்டிற்குள், 3 தீவிரவாதிகள் நுழைந்தனர். தீவிரவாதிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த, 14 வயது சிறுவன் இர்பான், அவர்கள் மீது பாய்ந்து, தன் வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தான். 


அப்போது, இர்பான் மற்றும் அவனது தந்தையை, தீவிரவாதிகள் தாக்க முற்பட்டனர். அதில், சிறு காயமும் ஏற்பட்டது. எனினும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், கையில் கிடைத்த இரும்பு கம்பியால், தீவிரவாதிகளை தொடர்ந்து தாக்கினான் இர்பான். 


தன் வீரத்தால், தீவிரவாதிகளை  விரட்டியடித்த, இர்பானுக்கு, மத்திய அரசு, சௌர்ய சக்ரா விருது அறிவித்தது. தன்படி இன்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இர்பானுக்கு, சௌர்ய சக்ரா விருது வழங்கி கவுரவித்தார்.