NIT, CFTI ஆகியவற்றில் சேருவதற்கான 12ம் வகுப்பு தகுதி மதிப்பெண்ணில் மாற்றம்
கொரோனா நெருக்கடியை கருத்தில்கொண்டு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தகுதி மதிப்பெண்களில் தளர்வுகளை அறிவித்துள்ளது
தேசிய தொழில் நுட்ப கழகங்கள் NIT, மத்திய அரசின் நிதியில் இயங்கும் தொழில்நுட்ப கழகங்கள் CFTI ஆகியவற்றில் சேர்வதற்கான 12ம் வகுப்பு தகுதி மதிப்பெண்ணில் மத்திய அரசு தளர்வை அறிவித்துள்ளது. 75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எழுந்துள்ள சூழ்நிலையை கருத்தில்கொண்டு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், JEE மெயின் தேர்வு 2020-க்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் NIT, CFTI நிறுவனங்களில் சேர்வதற்கு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்று தெரிவித்துள்ளார்.
ALSO READ | உள்துறை அமைச்சர் அமித் ஷா பெயரை கூறி மோசடி... போலி தனிசெயலர் சிக்கினார்..!!
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
விதிமுறைப்படி, ஒரு மாணவர் தனது வகுப்பு 12 பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் அல்லது தகுதிக்கான தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று ரேங்க் எடுத்துள்ள தேர்ச்சி பெற்ற 20 சதவிதம் பேரில் இருக்க வேண்டும்.
மேலும், JEE நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தான் NIT, CFTI நிறுவனங்களில் சேர முடியும். எஸ்சி / எஸ்டி மாணவர்கள் குறைந்தது 65 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதிக மதிப்பெண் பெற்று ரேங்க் எடுத்துள்ள தேர்ச்சி பெற்ற 20 சதவிதம் பேரில் இருக்க வேண்டும் என்று இருந்தது.
ஆனால், கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையை கவனத்தில்கொண்டு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், JEE முதன்மை தேர்வு 2020-க்கு தகுதி பெற்ற மாணவர்கள், இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்று தெரிவித்துள்ளார்.
இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட JEE-Mains இப்போது செப்டம்பர் 1-6 முதல் நடைபெறும்.
முன்னதாக, இந்திய தொழில்நுட்ப கழகமான (IIT) இந்த ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விதிகளை தளர்த்த முடிவு செய்திருந்தது.