புதுடில்லி (NEW DELHI): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தனிப்பட்ட செயலாளராக தன்னை காட்டிக் கொண்டு மோசடி 25 வயது இளைஞரை டெல்லி போலீஸ் குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்ட இந்த நபர் ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் தெஹ் முண்டாவாரில் வசிக்கும் சந்தீப் சவுத்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் தொழிலாளர் அமைச்சர்களை தொடர்பு கொண்டு , சிலருக்கு வேலை கொடுக்குமாறு கூறியதாக, குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்ததையடுத்து சந்தீப் சவுத்ரி கைது செய்யப்பட்டார்.
A man posing as Personal Assistant(PA) of HM Amit Shah arrested near Rajasthan's Alwar. He had called up Rajasthan Labour Minister posing as HM Shah's PA following which the Minister's office had informed HMO & complaint was registered with Delhi Police Crime Branch: Delhi Police
— ANI (@ANI) July 23, 2020
சந்தீப் சவுத்ரி தருஹேராவின் ஹீரோ (Hero) நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், கோவிட் -19 நெருக்கடி காரணமாக வேலையை இழந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் சவுத்ரி தனது காதலியின் பெயரில் MTNL நிறுவனத்திடம் இருந்து ஒரு SIM கார்டை பெற்று, அதிலிருந்து இரு மாநில அமைச்சர்களையும் தொடர்பு கொண்டார்
ALSO READ | டெல்லியில் தனது மகளை கடத்தல்காரரிடமிருந்து காப்பாற்றிய வீரத்தாய்... வைரலான வீடியோ..!!!
பின்னர், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தில்லி போலீசுக்கு புகார் அளித்தது, அதன் பின்னர் குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து, விசாரணையை மேற்கொண்டு, குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் சவுத்ரியை ராஜஸ்தானின் ஆல்வாரில் இருந்து கைது செய்தது.