விமானிகளுக்கு சம்பள நிலுவைத் தொகை டிசம்பர் மாதத்திற்கான சம்பளம் மட்டுமே தற்போது பட்டுவாடா செய்யப்படும் என ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. 


சம்பள பாக்கியை உடனே வழங்காவிட்டால் வருகிற 1ம் தேதி முதல் விமானங்களை இயக்கமாட்டோம் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகளும், மற்ற ஊழியர்களும் அறிவித்திருந்தனர்.


இதைத்தொடர்ந்து, விமானிகள் மற்றும் விமான பராமரிப்பு பொறியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய முழு சம்பள பாக்கியையும் தற்போது தர இயலாது என்றும் டிசம்பர் மாத சம்பளத்தை மட்டும் தற்போது வழங்குகிறோம் என்று அந்நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு என பல காரணிகள் ஜெட் ஏர்வேஸ்-சின் சரிவுக்குக் காரணமாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை முற்றிலும் முடங்கும் அபாயம் எழுந்துள்ளது.