ஒடுக்கப்பட்டவர்களின் தலைவராக கருதப்படும் ஜிக்னேஷ் மீவானி, கர்நாட்டகாவில் பாஜக-வுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் நடைப்பெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில், சுயேட்சை வேட்பாளராக நின்று வெற்றிப் பெற்றவர் ஜிக்னேஷ் மீவானி. பெங்களூருவின் டவுன் ஹாலில் நேற்று நடைபெற்ற "கௌரி டே" நிகழ்ச்சியில், வருகின்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக-விற்கு மக்கள் வாக்களிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.



கர்நாடகாவை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும் சமூக ஆர்வலருமான கௌரி லங்கேஷ் அவர்கள் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது மரணம் நாட்டையே உலுக்கியது. 



இந்நிலையில், நேற்று அவரது 55-வது பிறந்தநாளை முன்னிட்டு பெங்களூருவின் டவுன் ஹாலில் "கௌரி டே" என்ற பெயரில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜிக்னேஷ் மீவானி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக-விற்கு மக்கள் வாக்களிக்க கூடாது, இதனை வளியுறுத்தி வரும் ஏப்ரல் மாதம் கர்நாடக முழுவதும் இரண்டு வாரம் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.


கர்நாடக சட்டமன்றத்திற்கான 224 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவுள்ள சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல்-மே மாதங்களில் நடைப்பெறவுள்ளது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா அவர்களின் தலைமையிலான ஆட்சி நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது!