ஸ்ரீநகர்: இன்று ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் பொது பாதுகாப்புச் சட்டத்தின் (Public Safety Act) கீழ் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தியை (Mehbooba Mufti) காவலில் தடுத்து வைத்ததை மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்துள்ளது. அதேநேரத்தில், இன்று காலை மக்கள் மாநாட்டுக் கட்சியின் தலைவரும் மற்றும் முன்னாள் மாநில அமைச்சருமான சஜித் லோன் விடுக்கப்பட்டுள்ளார்.  370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அவர் ஒரு வருடம் கழித்து விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்து, மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தனர்.


ஜே & கே (Jammu and Kashmir) மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து, முப்தி கிட்டத்தட்ட ஒரு வருடம் சிறைவாசம் அனுபவித்துள்ளார், முதலில் அரசாங்க விருந்தினர் மாளிகையிலும் பின்னர் அவரது இல்லத்திலும் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.


ALSO READ | மெஹபூபா, உமர் அப்துல்லாவை விடுதலை செய்ய பிரார்த்தனை செய்யுங்கள்


PSA இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக இருக்கும் முப்தி, முதலில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். முன்னாள் முதல்வர்கள் ஃபாரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா ஆகியோரும் PSA இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்கள். உமர் மற்றும் பாரூக் இருவரும் மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர். 


அதாவது 370-வது சட்டபிரிவு (Article 370) ரத்து செய்யும் போது, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில் முன்னாள் முதல்வர்களான ஃபாரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆவார்கள்.


ALSO READ | சட்டப்பிரிவு 370, 35A நீக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள் என்ன?


ஜம்மு-காஷ்மீர் பொதுப் பாதுகாப்புச் சட்டம், 1978 என்பது ஒரு தடுப்புக்காவல் சட்டமாகும். சந்தேகத்தின் பேரில் மற்றும் விசாரணை இல்லாமல் ஒரு நபரை தடுத்து வைக்க PSA அனுமதிக்கிறது. இது ஏற்கனவே போலீஸ் காவலில் உள்ள ஒரு நபர் மீது பாயலாம். நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட உடனேயே அல்லது நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஒரு நபர் மீது கூட இந்த சத்தின் கீழ் கைது செய்யலாம்.