ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் 35A-வினை நீக்கியதன் மூலம் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது குறித்த ஒரு சிறிய அலசல்...
சட்டப்பிரி 370 மற்றும் 35A நீக்கத்தினால் ஏற்படும் மாற்றத்தினை குறித்து அறிவதற்கு முன்னதாக, இந்த சட்ட பிரிவுகளின் குறிக்கோள் என்ன என்பதை நாம் அறிய வேண்டும்.
நாட்டின் விடுதலைக்குப் பிறகு, தனிப்பிரதேசமாக இருந்த காஷ்மீர் மாநிலம் இந்தியாவோடு இணைவது குறித்து இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு காஷ்மீர் மக்களின் தலைவர் ஷேக் அப்துல்லா ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனம் 370 உள்ளிட்ட பிரிவுகள் நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தமாக நிறைவேற்றப்பட்டு அதனடிப்படையில் காஷ்மீர் மாநிலம் இந்தியாவோடு இணைக்கப்பட்டது.
இந்த சட்டப்பிரி 370 மற்றும் 35A-வின் கீழ் ஜம்மு-காஷ்மீர் பெற்றிருந்த சலுகைகள் என்ன?
- ஜம்மு-காஷ்மீர் மாநில அரசுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கப்படும்.
- ஜம்மு-காஷ்மீரில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தியார், காஷ்மீரி என இரட்டை குடியுரிமை உண்டு.
- காஷ்மீர் மாநிலத்திற்கென்று தனிக் கொடி.
- நிதி அவசரநிலை(சட்டப்பிரிவு 360) மத்திய அரசால் பிரகடனப்படுத்த முடியாது
- ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினர்களான இந்து மற்றும் சீக்கியர்களுக்கு இட ஒதுக்கீடு எதுவும் கிடையாது.
- ஜம்மு-காஷ்மீரை சாராத மற்ற மாநிலத்தவர்கள் அங்கு நிலம் மற்றும் சொத்துக்களை ஏதும் வாங்க முடியாது.
- தகவல் அறியும் உரிமைச் சட்டம் கிடையாது.
- சட்டப்பேரவையின் ஆயுட்காலம் 6 ஆண்டுகள்.
- ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண் வெளிமாநிலத்தவரை திருமணம் செய்தால் அவர் அம்மாநில குடியுரிமையை இழப்பார்.
- ஜம்மு-காஷ்மீர் மாநில பஞ்சாயத்து அமைப்புகளுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
- அனைவருக்கும் கல்வி சட்டத்தின் கீழ் பயனடையமுடியாது.
இந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35A நீக்கப்பட்டதால் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?
- சிறப்பு அதிகாரங்கள் எதுவும் காஷ்மீருக்கு அளிக்கப்படமாட்டாது.
- இந்தியர் என்னும் ஒற்றைக் குடியுரிமை மட்டுமே.
- இந்தியாவின் மூவர்ணக் கொடிதான் ஜம்மு-காஷ்மீருக்கும். தனிக்கொடி என ஏதும் கிடையாது.
- மாநிலத்தினுள் சட்டப்பிரிவு 360 செல்லுபடியாகும். நிதி அவசரநிலையை மத்திய அரசு பிரகடனப்படுத்தலாம்.
- சிறுபான்மையினருக்கு 16% இடஒதுக்கீடு கிடைக்கும்.
- ஜம்மு-காஷ்மீரை சேராத பிற மாநிலத்தவர்களும் நிலம் மற்றும் சொத்துகளை வாங்கலாம்.
- தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தகவல் பெறலாம்.
- சட்டப்பேரவை காலம் மற்ற எல்லா ஆண்டுகளைப் போலவும் 5 ஆண்டுகளாக மாற்றப்படும்.
- ஜம்மு-காஷ்மீர் குடியுரிமைப் பெற்ற பெண் மற்ற மாநிலத்தில் திருமணம் செய்தாலோ, வெளிநாட்டினரை திருமணம் செய்தாலோ இந்திய குடிமகளுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கும்.
- ஜம்மு-காஷ்மீர் மாநில பஞ்சாயத்து அமைப்புகளுக்கு, மற்ற இந்திய மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்படும் அதிகாரம் வழங்கப்படும்.
- அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தில் பயன்பெறலாம்.