இந்தியாவில், பாரத் பயோடெக்கின் (Bharat Biotech) கோவாக்ஸின் (Covaxin) மற்றும் ஆக்ஸ்போர்டு- சீரம்  நிறுவனத்தின் கோவிஷீல்ட் (Covishield) ஆகியவை அவசர பயன்பாட்டிற்காக ஒப்புதலைப் பெற்ற முதல் இரண்டு கோவிட் -19 தடுப்பூசிகளாகும். அவை நாட்டில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கோவிஷீல்ட், கோவாக்ஸின் தவிர ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜான்சன் & ஜான்சன்  (Johnson & Johnson) நிறுவனம் இந்தியாவில் ஒற்றை டோஸ் கோவிட் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டிற்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Also Read | Covovax இந்தியாவில் அக்டோபர் மாதம் அறிமுகமாகிறதா; SII கூறியது என்ன


முன்னதாக, ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) வெள்ளிக்கிழமை இந்தியாவில் அதன் ஒற்றை டோஸ் கோவிட் -19 தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்த்துள்ளதாக தெரிவித்தது. "ஆகஸ்ட் 5, 2021 அன்று ஜான்சன் & ஜான்சன் பிரைவேட் லிமிடெட் அதன் ஒற்றை டோஸ் கோவிட் -19 தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோரி இந்திய அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளது" என்று ஜான்சன் & ஜான்சன் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


இது ஒரு முக்கியமான மைல் கல்லாகும். ஜான்சன் & ஜான்சன் மற்றும்  பயோலாஜிக்கல் இ லிமிடெட்  இணைந்து ஒற்றை டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை இந்திய மக்களுக்கும், உலகின் பிற பகுதிகளுக்கும்  வழங்க திட்டமிட்டுள்ளது


ALSO READ | Covaxin - Covishield கலந்து கொடுப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: ICMR


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR