லக்னோ: சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், நீதிபதி ஒருவர் வீட்டிலேயே ஒருவர் கைவரிசை காட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. நீதிபதியின் மனைவி, தனது கிரெடிட் கார்டின் உச்ச வரம்பை அதிகரிக்க முயன்றபோது, ​​சைபர் கிரிமினல்கள் அவரிடம் இருந்து 13 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், இணையத்தில் தனது தனியார் வங்கியின் ஹெல்ப்லைன் எண்ணைத் தேடியதாக காவல்துறையிடம் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சைபர் மோசடி தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்துள்ள போலீசார், மோசடி செய்தவர்களின் இருப்பிடத்தை கண்டறியும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மோசடி செய்பவர் நீதிபதியின் மனைவியின் தொலைபேசியின் ரிமோட் கண்ட்ரோல் அணுகலை எடுத்து, அதன் மூலம் அவரது கணக்கின் விவரங்களைப் பெற்று கடன் பெற்றதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இணையதளத்தில் இருந்த தொலைபேசி எண்ணை டயல் செய்தபோது, ​​வங்கிப் பிரதிநிதியாகக் தன்னை கூறியவர், தனது கடன் வரம்பை அதிகரிக்க ரூ.15,000 வங்கிக் கணக்கிற்கு மாற்றச் சொன்னதாகவும், நவம்பர் 25 ஆம் தேதி அந்தத் தொகை திருப்பித் தரப்படும் என்று உறுதியளித்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.


மேலும் படிக்க | கடந்த வாரம் துரோகி! இந்த வாரம் நண்பேண்டா! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!


பணம் திரும்ப கிடைக்காததால், மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்ததாக புகார்தாரர் மேலும் கூறினார். மோசடி செய்பவர் அவருக்கு ஒரு இணைப்பை அனுப்பி, வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்கும் படிவத்தை நிரப்பச் சொன்னார்.  அவர் சொன்னது போல செய்தாலும், எனது பணம் திரும்பக் கிடைகக்வில்லை. ஆனால், நவம்பர் 28 அன்று, எனது வங்கிக் கணக்கில் இருந்து கடனாக 13 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளது" என்று நீதிபதியின் கூறினார்.


மோசடி செய்பவர்கள் கூகுளில் தங்கள் எண்களை வாடிக்கையாளர் பராமரிப்பு உதவி எண் எனக் கூறி வெளியிடுவதாக தெரிவித்த போலீசார், அவர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களுக்கான அணுகலை வழங்கும் பயன்பாட்டைப் பதிவிறக்குமாறு அழைப்பாளர்களைக் கேட்கிறார்கள், இது அவர்களின் வங்கி விவரங்கள் மற்றும் OTP களுக்கான அணுகலைப் பெற உதவுகிறது.


“வங்கி அட்டை எண், சிவிவி, ஏடிஎம் பின், வங்கிக் கடவுச்சொற்கள் மற்றும் ஒரு முறை கடவுச்சொற்கள் (OTP) போன்ற வங்கி விவரங்களை எவருடனும் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் எவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஒரு பொதுவான நடைமுறையாக, எந்த வங்கியும் அல்லது புகழ்பெற்ற நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்களிடம் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் ரகசிய விவரங்களைக் கேட்பதில்லை,” என்பதைத் தெரிந்துக் கொள்ளவேண்டும் என்று சைபர் கிரைம் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.


மேலும் படிக்க | ஸ்கூல் பேகில் என்னவெல்லாம் இருக்கும்? ஆணுறை, சிகரெட்? அதிர வைக்கும் பெங்களூர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ