சைபர் கிரைம்: மொபைல் செயலி மூலம் முதலீடு என்ற பெயரில் ரூ.903 கோடி மோசடி!

ஹைதராபாத் காவல்துறை டெல்லி மற்றும் பல இடங்களில் உள்ள கால் சென்டர்களிலும் சோதனை நடத்தியதில், கும்பல் ஒன்று மொபைல் ஆப் மூலம் முதலீடு செய்வதாக கூறி ஏமாற்றி வந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்தது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 12, 2022, 08:39 PM IST
  • சைபர் கிரைம் போலீசார் 2 சீனர்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளது.
  • மொபைல் செயலி மூலம் நிறுவனங்களில் முதலீடு என்ற பெயரில் மோசடி.
  • முதலீடு என்ற பெயரில் ஏமாற்றப்பட்ட பணத்தைக் கொண்டு ஹவாலா வியாபாரம்.
சைபர் கிரைம்: மொபைல் செயலி மூலம் முதலீடு என்ற பெயரில் ரூ.903 கோடி மோசடி! title=

மொபைல் செயலி மூலம் நிறுவனங்களில் முதலீடு செய்கிறோம் என்ற பெயரில் சீனா மற்றும் துபாயில் இருந்து செயல்படும் மோசடி கும்பலை ஹைதராபாத் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு கைது செய்துள்ளது. இந்த கும்பல் இதுவரை நாடு முழுவதும் சுமார் ரூ.903 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளது. இந்தக் கும்பலைச் சேர்ந்த சீனக் குடிமக்கள் உட்பட 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி நெட்வொர்க்கில் தொடர்புடையவர்களை முழுவதுமாக கண்டறிய டெல்லி மற்றும் பல இடங்களில் இயங்கும் கால் சென்டர்களிலும் ஹைதராபாத் போலீசார் சோதனை நடத்தினர்.

சைபர் கிரைம் போலீசார் 2 சீனர்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் தெரிவித்தார்.சாஹில் பஜாஜ், சன்னி என்கிற பங்கஜ், வீரேந்திர சிங், சஞ்சய் யாதவ், நவ்நீத் கவுஷிக், முகமது பர்வேஸ், சையத் சுல்தான், மிர்சா நதீம் பைக். லி சோங்ஜுன் மற்றும் சூ சுன்-யு ஆகியோர் சீனாவில் வசிப்பவர்கள். லீயும் சுன்-யுவும் டெல்லி மற்றும் மும்பையில் முதலீடு என்ற பெயரில் ஏமாற்றப்பட்ட பணத்தைக் கொண்டு ஹவாலா வியாபாரம் செய்து வந்தனர்.

தர்னாகாவில் வசிக்கும் ஒருவர், 'லோக்சம்' என்ற முதலீட்டு செயலி மூலம் தன்னிடம் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்தார். நிறுவனங்களில் முதலீடு செய்வதாகக் கூறி இவரிடம் சுமார் 1.6 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் தொடங்கினர்.

மேலும் படிக்க | வீழ்ச்சி காணும் கச்சா எண்ணெய் விலைகள்; பெட்ரோல்-டீசல் விலையும் குறையுமா..!!

விசாரணையில், IndusInd வங்கியின் கணக்கில், 1.6 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்ததாக காவல் துறை ஆண்டிய கூறினார். இந்தக் கணக்கு ஷிண்டாய் டெகனாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் உள்ளது. இந்த கணக்கை தொடங்கிய வீரேந்திர சிங்கை புனேவில் கைது செய்த போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

இதேபோல் 15 வங்கிக் கணக்குகள் வெவ்வேறு இடங்களில் திறக்கப்பட்டன, அவை தைவான் நாட்டைச் சேர்ந்த சூ சுன்-யுவால் இயக்கப்பட்டன. சூ சூன்-யு, மும்பையில் தற்காலிக விசாவில் வசித்து வந்தார், அங்கிருந்து செவ்வாய்கிழமை ஹைதராபாத் காவல்துறையினரால் பிடிபட்டார். இந்த கணக்குகள் மூலம் ஹவாலா தொகையை இங்கிருந்து அங்கு கொண்டு செல்ல முடியும் என்பதற்காக, இந்த கணக்குகளின் விவரங்கள், யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு மற்றும் சிம் கார்டு போன்றவற்றை மற்ற நாடுகளில் அமர்ந்திருக்கும் ஆபரேட்டர்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் சூ சுன்-யு.

மேலும் படிக்க | உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோயில் காரிடாரை திறந்து வைத்தர் பிரதமர் மோடி!

ஷிண்டாய் டெக்னாலஜிஸ் வங்கிக் கணக்கிலிருந்து மற்ற 38 வங்கிக் கணக்குகளுக்குப் பணம் மாற்றப்பட்டது. அவற்றில் சையத் சுல்தான் மற்றும் மிர்சா நதீம் பெய்க் ஆகியோரின் கணக்குகள் இருந்தன, அவை பர்வேஸின் உத்தரவின் பேரில் திறக்கப்பட்டன. இந்த கணக்குகளின் விவரங்கள் மற்றும் கடவுச்சொற்களை துபாயில் அமர்ந்திருந்த இம்ரானிடம், அங்கிருந்து இயக்கி வந்த பர்வேஸ் பகிர்ந்துள்ளார்.

ஷிண்டாய் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 38 வங்கிக் கணக்குகளில் இருந்து ரஞ்சன் மனி கார்ப் மற்றும் கேடிஎஸ் ஃபாரெக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டதாக காவல் துறை ஆணையர் தெரிவித்தார். அங்கிருந்து நவ்நீத் கௌசிக் இந்த தொகையை ரூபாயில் இருந்து அமெரிக்க டாலருக்கு மாற்றினார். இன்டர்நேஷனல் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற பெயரில் இந்தத் தொகையைக் காட்டி இந்தப் பணி நடந்தது. இதிலிருந்து கிடைக்கும் அமெரிக்க டாலரை சாஹலும், சன்னியும் கையாள்கின்றனர், அவர்கள் இந்த தொகையை ஹவாலா மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்புவது வழக்கம். இந்த வேலைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்ற பணம் மாற்றுபவர்கள் மற்றும் அந்நிய செலாவணி பரிமாற்றங்கள் மூலம் முழுக்க முழுக்க வெள்ளைப் பணத்தில் செய்யப்பட்டன.

இவர்கள் கடந்த 7 மாதங்களில் ராஜன் மனி கார்ப் மூலம் ரூ.441 கோடியும், கேடிஎஸ் ஃபாரெக்ஸ் மூலம் ரூ.462 கோடியும் பரிவர்த்தனை செய்துள்ளனர் என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். இந்த ரூ.903 கோடியில் பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.1.91 கோடியை மட்டும் முடக்கி காவல்துறை வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள தொகையையும் முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | Watch Video: கர்தவ்யா பாதையாக மாறும் தில்லி ராஜ பாதை; பிரம்மிக்க வைக்கும் காட்சி!

மேலும் படிக்க | NRI Remittances மற்றும் கிரெடிட் வளர்ச்சியில் அதிகரிப்பை காணும் பெடெரல் வங்கி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News