புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எதிர்மறையான கருத்துக்களுக்குப் பிறகு, நுபுர் ஷர்மாவுக்கு நியாயமான விசாரணை மறுக்கப்படும் என்று கூறும் மனு தலைமை நீதிபதிக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நூபுர் ஷர்மாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவிடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், கவு மகாசபா தலைவருமான ஒருவர் இந்த கடிதத்தை தாக்கல் செய்துள்ளார். 


முகமது நபி குறித்து பேசியதற்காக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (2022, ஜூலை 1) கடும் கண்டனம் தெரிவித்தது. 


தொலைகாட்சி விவாதத்தில் நுபுர் ஷர்மா கூறிய கருத்துக்கள் தொடர்பாக நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜேபி பார்திவாலா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால சட்ட அமர்வு கண்டனம் தெரிவித்தது.


நுபுர் ஷர்னாவின் தவறான துஷ்பிரயோகமான வார்த்தைகள் அதன் விளைவு உதய்பூரில் 48 வயதான கன்ஹையா லால் கொல்லப்பட்டதில் வந்து முடிந்திருக்கிறது என்று நீதிமன்ற சட்ட அமர்வு கண்டித்தது.


மேலும் படிக்க | நபிகள் குறித்த சர்ச்சை : மேற்கு வங்க கலவரம் தொடர்பாக 200 பேர் கைது


ரியாஸ் அக்தாரி மற்றும் கவுஸ் முகமது ஆகிய இருவர், கன்னையா லாலின் தலையை துண்டித்து, அதை வீடியோவாக ஆன்லைனில் வெளியிட்டனர்.


இந்த விவகாரத்தில், நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக கடும் விவாதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், கவு மகாசபா தலைவருமான அஜய் கௌதம், உச்ச நீதிமன்ற பெஞ்ச் அளித்த “பாதகமான கருத்துக்களை” திரும்பப் பெறக் கோரி இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணாவிடம் மனு தாக்கல் செய்தார்.


கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் பாஜக தலைவர் நுபுர் சர்மாவுக்கு எதிராக. நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால பெஞ்ச் அளித்த கடும் விமர்சனங்களை திரும்பப் பெறுமாறு தலைமை நீதிபதி ரமணாவிடம் அஜய் கௌதம் கோரியுள்ளார், அப்போதுதான், நூபுர் ஷர்மா மீதான வழக்கு நியாயமாக நடைபெறும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தவர் தலை துண்டித்துக் கொலை


மனு என்ன சொல்கிறது?
நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறிய கருத்துக்கள் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட வேண்டும் கடிதம் மனுவில் கூறப்பட்டுள்ளது. 


உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இத்தகைய கருத்துக்களுக்குப் பிறகு, நூபுர் ஷர்மாவுக்கு நியாயமான விசாரணை மறுக்கப்படும் என்பதையும், ஷர்மாவின் கருத்தை கன்ஹய்யாவின் தலை துண்டிக்கப்பட்டதையும் இணைக்கும் நீதிபதிகளின் கருத்துக்கள் குறித்து, குடியரசுத் தலைவருக்கும் அந்த மனு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


நீதிபதிகளின் தீர்ப்பானது, உதய்பூரில் நடைபெற்ற கொடூரமான செயலை நியாயப்படுத்துவதாக இருப்பதாகவும், கொலையாளிகளின் வெறிச்செயலும், மத துவேஷமும் இந்த கருத்துகளுக்கு பின் மறைந்துவிடுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மனுவில் கூறபட்டுள்ளது.


நுபுர் ஷர்மா மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்றும் கடிதம் மனுவில் கோரப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | நுபூர் சர்மாவை சரமாரியாக விளாசிய உச்சநீதிமன்றம்


உச்ச நீதிமன்றத்தின் பிற கருத்துகள்


தாம் பேசியதால் ஏற்படும் எதிர்விளைவுகளை பற்றி சிறிதும் யோசிக்காமல் பேசியிருக்கிறார் நுபுர் சர்மா. ஆகையால் அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற கோரும் நுபுர் சர்மா மனு நிராகரிக்கப்படுகிறது என்று நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார்.


தொலைக்காட்சி சேனல் விவாதத்தில் முகமது நபியைப் பற்றி அவர் கூறிய கருத்துகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட பல எஃப்ஐஆர்களை இணைக்க வேண்டும் என்ற நுபுர் ஷர்மாவின் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மாற்று வழிகளைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்துடன் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. 


நீதிமன்றத்தின் கருத்துகள் என்ன
நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார். உதய்பூரில் நடந்த கொலைக்கு நுபுர் சர்மாவின் பொறுப்பற்ற பேச்சுதான் காரணம். அவரது செயல்பாடுகளால் நாட்டில் இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.


அவரது தொலைக்காட்சி விவாதம் கண்டனத்துக்குரியது. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அது தொடர்பாக நுபுர் சர்மா எப்படி வெளியில் பேச முடியும்?


அவர் பொறுப்பற்ற முறையில் பேசியதால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?


ஜனநாயகம் எல்லோருக்கும் பேச்சுரிமையை வழங்கியுள்ளது. ஆனால் அந்த உரிமையை தவறாக பயன்படுத்தக் கூடாது. நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நுபுர் பேசியுள்ளார். ஜனநாயக வரம்பை மீற இந்த நீதிமன்றம் அனுமதிக்காது.


சர்ச்சை ஏற்பட்டதும் அவர் தனது கருத்துக்களை திரும்ப பெறுவதாக சொல்வது மிக மிக தாமதமான முடிவாகும். நாட்டு மக்களின் உணர்வை நூபுர் சர்மா பொருட்படுத்தாமல் புறம் தள்ளியுள்ளார். இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.


ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் நுபுர் சர்மா முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். தொலைக்காட்சியில் நேரில் தோன்றி அவர் மன்னிப்பு கேட்பதுதான் நல்லது என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.


மேலும் படிக்க | உத்தரபிரதேசத்தில் நீதித்துறையின் திறமை சோதிக்கப்படுகிறது: SC தலைமை நீதிபதிக்கு கடிதம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR