தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கடந்த வாரம் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினார். இதனைத் தொடர்ந்து, டெல்லி பாஜக சமூக ஊடகப்பிரிவு தலைவரான நவீன் ஜிந்தால் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து பின்னர் அப்பதிவுகளை நீக்கினார்.
இவ்விவகாரம் சர்ச்சையான நிலையில், நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்தும், நவீன் ஜிந்தாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முற்றிலும் நீக்கியும் பாஜக நடவடிக்கை எடுத்தது. இதற்குக் கண்டனம் தெரிவித்து, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர்கள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க மாநிலம் ஹவுரா நகரில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேற்குவங்க காவல்துறை டிஜிபி மனோஜ் மாளவியா கூறுகையில், சர்ச்சைக் கருத்தை முன்வைத்த நூபுர் சர்மாவுக்கு கொல்கத்தா போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. ஜூன் 20-ம் தேதியன்று அவர் நார்கல்டங்கா காவல் நிலையத்தில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.
மேலும் படிக்க |
நூபுர் சர்மாவின் சர்ச்சைக் கருத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, வளைகுளா நாடுகளில் இந்தியாவிற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. தனி நபர் வெளியிட்ட கருத்துகள் இந்திய அரசின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை எனவும், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இவ்விவகாரத்தில் விளக்கமளித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR