இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத், காங்கிரஸின் விக்ரமாதித்ய சிங்கை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். கங்கனாவின் பிரச்சாரம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் வலுவான ஆதரவால் இன்னும் வலுப்பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, கங்கனா ரனாவத் வேட்பாளராக நியமிக்கப்பட்டது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பல மூத்த உறுப்பினர்கள் இருந்த நிலையில், அவருக்கு சீட் கொடுக்கப்பட்டது பாஜக-வுக்குள்ளேயே பலருக்கு நெருடலை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கங்கனா ரனாவத் முன்னிலை வகித்து தன் திறனை நிரூபித்துள்ளார். 


அரசியல் அபிலாஷைகள்


கங்கனா ரனாவத், பல ஆண்டுகளாக, பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) தன்னை இணைத்துக் கொண்டு, அரசியலில் வலுவான ஆர்வத்தைக் காட்டி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் கொள்கைளை அவர் பகிரங்கமாக ஆதரித்தார். இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான அவரது முடிவு அவரை முழுநேர அரசியல்வாதியாக்கியது. 


மேலும் படிக்க | Election Results 2024: ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து! பிகாருக்கு என்ன?


கங்கனா ரனாவத், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் மற்றும் சிட்டிங் எம்.பி.யின் மகன் விக்ரமாதித்ய சிங் ஆகியோரை தோற்கடித்துள்ளார். கங்கனாவுக்கு 5,37,022 வாக்குகள் அளித்து மோடி அரசின் மீதுள்ள நம்பிக்கையை மண்டி மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற கங்கனா ரனாவத் வெற்றிச் சான்றிதழையும் பெற்றுள்ளார். கங்கனா விக்ரமாதித்ய சிங்கை 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் என்று சொல்லலாம்.


1987 ஆம் ஆண்டு பிறந்தார்


கங்கனா ரனாவத், மார்ச் 23, 1987 இல், ஹிமாச்சலப் பிரதேசத்தின் பாம்லாவில் பிறந்தார். 2006 இல் தனது முதல் படமான கேங்க்ஸ்டர் மூலம் பாலிவுட்டில் அவர் நுழைந்தார். இப்படம் மூலம் அவர் தனது நடிப்புத்திறனையும் நிரூபித்தார். அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்தார். ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவர் வெற்றிபெறவில்லை. 


சர்ச்சைகளின் நாயகி


பிரபலமான நடிகையாக இருந்தாலும், கங்கனா ரனாவத்தின் வாழ்க்கையில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. அவர் பாலிவுட்டில் நெபோடிசம், அதாவது வாரிசுகளின் குழந்தைகளுக்கு கிடைக்கும் சலுகைகளை எதிர்த்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். கரண் ஜோஹர் உட்பட பலரை அவர் வெளிப்படையாகத் தாக்கியுள்ளார். 


கங்கனா ரணாவத்தின் முக்கிய திருப்புமுனை 2014 இல் வெளியான குயின் திரைப்படத்தில் வந்தது. இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது அவருக்கு கிடைத்தது. தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் (2015), மணிகர்னிகா: தி குயின் ஆஃப் ஜான்சி (2019) மற்றும் பங்கா (2020) போன்ற படங்களில் அவர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார். இது பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவராக அவரது நிலையை உயர்த்தியது. 


மேலும் படிக்க | Lok Sabha Election Results 2024 : சந்திரபாபு நாயுடு செய்தியாளர் சந்திப்பு திடீரென ரத்து... பாஜகவுக்கு செக்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ