கான்பூர் என்கவுண்டர்: சபேபூர் காவல் நிலையத்தில் இருந்த 68 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
கான்பூர் என்கவுண்டரில் எட்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட பின்னர், சபேபூர் காவல் நிலையத் அதிகாரி வினய் திவாரி ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது மொத்தம் 68 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
லக்னோ: பயங்கரமான குற்றவாளி விகாஸ் துபேயின் வீட்டிற்கு வெளியே நடந்த என்கவுண்டரில் (Kanpur Encounter Case) எட்டு போலீசார் இறந்தனர். இந்த சம்பவம் நடந்த பின்னர், மாவட்டத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மீது யோகி அரசு (Yogi Government) தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்போது STF டி.ஐ.ஜி அனந்த் தேவ் (Anant Dev) மாற்றப்பட்டார். அவர் அங்கிருந்து நீக்கப்பட்டு பிஏசி மொராதாபாத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். கான்பூரைச் சேர்ந்த ஜெய் பாஜ்பாய் என்ற தொழிலதிபருடன் அனந்த் தேவ் படங்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து அவர் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தார். உண்மையில், பிறந்தநாள் விழாவில் விகாஸ் துபேவுடன் ஜெய் பாஜ்பாயின் படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின. இதன் பின்னர் ஜெய் பாஜ்பாயும் விசாரிக்கப்பட்டார். இதன் மூலம், சபேபூர் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட அனைத்து சப்-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள் மற்றும் தலைமை கான்ஸ்டபிள்கள் போலீஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.
READ MORE | Kanpur Encounter: ரவுடி-போலீசார் மோதல்; DSP உட்பட எட்டு உ.பி. போலீசார் பரிதாபமாக மரணம்
READ MORE | Kanpur Encounter: ரவுடி-போலீசார் மோதல்; DSP உட்பட எட்டு உ.பி. போலீசார் பரிதாபமாக மரணம்
கொலைக்குப் பின்னர், அப்போதைய எஸ்.எஸ்.பி அனந்த் தேவ் குறித்து வெளியான கடிதங்கள் மீது பல கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த கடிதம் சம்பந்தமான வழக்கின் விசாரணை ஐ.ஜி.லட்சுமி சிங்குக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், அப்போதைய எஸ்எஸ்பி கான்பூர் அனந்த் தேவ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐபிஎஸ் அதிகாரி டிஜிபி-க்கு கடிதம் அனுப்பியிருந்தார்.