கொரோனா தொற்று வழக்குகள் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சனிகிழமை நிலவரப்படி நாட்டில் 5 லட்சத்திற்கும் மேல் தொற்றுக்கள் பதிவாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுபோன்ற சூழ்நிலையில், கொரோனா மருந்து தயாரிக்கப்படும் வரை, சமூக தூர மற்றும் முகமூடிகளைப் பயன்படுத்தி நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நாட்டில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், முகமூடிகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. முகமூடிகள் தயாரிப்பதில் நிறைய பேர் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இளைஞர்களும் அடங்குவம். குறிப்பாக காவல்துறை அதிகாரிகள் கூட முகமூடிகளை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.


READ | ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்; எச்சரிக்கும் உளவுதுறை...


இந்நிலையில் இதேப்போன்ற சமீபத்திய நிகழ்வு கர்நாடகாவிலிருந்து வந்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த 10 வயது சிறுமி சொந்தமாக முகமூடியை தைத்து சில மாணவர்களுக்கு விநியோகித்து வருகிறார். சிறுமியின் ஆர்வம் சமூக ஊடகங்களில் பாராட்டப்பட்டு வருகிறது. ANI அறிக்கையின்படி, '10 வயது சிறுமி சிந்துரி உடுப்பியைச் சேர்ந்தவர். இவர் ஒரு மாற்றுதிறனாலியும் கூட,. அப்படியிருந்தும், அவள் ஒரு கை தையல் இயந்திரம் கொண்டு முகமூடிகளைத் தைத்து தன்னுடன் பயிலும் மாணவர்களுக்கு முக மூடி விநியோகித்து வருகின்றார். தகவல்கள் படி, சிந்துரி வியாழக்கிழமை SSLC தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு இந்த முகமூடியை விநியோகித்துள்ளார்.



தகவல்கள் படி, சிந்துரி பல முகமூடிகளை தைத்து தனது நண்பர்களுக்கு விநியோகித்துள்ளார். அதுவும் தனது ஒரு கையால். உண்மையில், சிந்துரி பிறந்தபோது, ​​அவரது இடது கை முழங்கையின் கீழ் ஒரு பாதிப்பிற்கு உள்ளானது. ஆனால் அவர் தனது உடல் குறைபாட்டை பலவீனமாக மாற்ற விரும்பவில்லை. கொரோனா தொற்றுநோய்களின் போது கூட அவர் மக்களுக்கு முகமூடிகளை தயாரித்து தந்தார். 


READ | நன்னடைத்தையால் தண்டனை காலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்படுகிறாரா சசிகலா?


சிந்துரி தற்போது ஆறாம் வகுப்பு பயின்று வருகின்றார் மற்றும் ஒரு லட்சம் மக்களுக்கு முகமூடிகளை தயாரித்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். அவரது விருப்பம் முழுமையடைய பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.