கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் அமைந்துள்ள பிதனகெரே கிராமத்தில் பிரபலமான பசவேசுவரா மடம் அமைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மடத்தில் 161 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை அமைக்க கடந்த 2014ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.


இந்த சிலையை வடிவமைக்கும் பொறுப்பு தமிழகத்தைச் சேர்ந்த சிற்பி மாரிமுத்து என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிற்பி மாரிமுத்துவின் தலைமையில் சுமார் 50 பேர் இந்த சிலை வடிவமைப்பில் பணியாற்றினர். 


சுமார் 7 வருடங்களை கடந்த நிலையில் தற்போது இச்சிலையானது முழுமைப் பெற்றுள்ளது.


இச்சிலை இயற்கை சீற்றத்தை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இரும்பு மேடையில், கான்கிரிட் கலவையால் உயரமெழுப்பி அமைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு : கேரள அமைச்சர்..!


இந்த சிலையில் உயரம் 161 அடி என்பதால், உலகிலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேய சாமி சிலையாக இந்த சிலை கருதப்படுகிறது.


இதற்கிடையில், கர்நாடகாவிலுள்ள இந்த ஆஞ்சநேயர் சிலையை ராமநவமி தினத்தையொட்டி இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர் பக்தர்களிடம் உரையாற்றினார். 


பின்னர் பக்தர்கள் தரிசித்து வழிப்பட திறந்து வைக்கப்பட்டது. 


மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்


இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்துக்கொண்டு நிகழ்ச்சியின் தலைமை தாங்கினார். 


 



மேலும், சிலை திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோ‌ஷங்கள் எழுப்பி வழிப்பட்டனர். 


மேலும் படிக்க | மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதே பாஜகவின் எண்ணம் - சீத்தாராம் யெச்சூரி!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR