பெங்களூரு: விநாயகர் சதுர்த்தியை அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும் மற்றும் விழாவை கொண்டாடவும் கர்நாடக அரசு (Karnataka Govt) அனுமதி. அதேநேரத்தில் சில கட்டுப்பாடுகளுடன் இந்த அனுமதியை பாஜக தலைமையிலான எடியூரப்பா அரசு அளித்துள்ளது. மத்திய COVID-19 வழிகாட்டுதல்கள் (அன்லாக் 3) படி, ஆகஸ்ட் 31 வரை சமூக, மத மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்காக பொது கூட்டத்திற்கு தடை விதித்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கான விதிமுறைகளை தளர்த்த கர்நாடக அரசு திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில், ஆகஸ்ட் 22 முதல் விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi) கொண்டாட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பொது இடங்களில் ஊர்வலங்கள் மற்றும் பெரிய மக்கள் கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.


ALSO READ | வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள்.. வீதிகளில் வேண்டாம்: TN Govt


விநாயகர் சிலைகளை வைப்பதற்கு முன் அதற்கு போடப்படும் பந்தல்கள் மற்றும் பிற ஏற்பாடுகளை குறித்து கோயில் நிவகத்தினர் உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். வார்டுகள் அல்லது கிராமத்திற்கு ஒரு பந்தல் என்ற எண்ணிக்கை அளவில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அரசு வழிகாட்டி விநாயகர் சிலைகளின் உயரத்தை பொது பந்தல்களில் (Public Pandals) நான்கு அடியிலும், வீடுகளுக்கு இரண்டு அடியிலும் வைக்க வேண்டும்.


சிலைகளை வீட்டிலேயே கிணறு அல்லது சிறிய நீர் தொட்டிகளில் கரைக்குமாறு அறிவுறுத்தப்பட்டாலும், பொது இடங்களில் நிறுவப்பட்ட சிலைகளை மொபைல் டேங்கர்கள் அல்லது நியமிக்கப்பட்ட குளங்களில் கரைக்க அனுமதிக்கப்படும். இருப்பினும், சிலைகளை நீரில் கரைக்கும் போது எந்த ஊர்வலமும் நடத்த அனுமதி கிடையாது. 


ALSO READ |  Ganesh Chaturthi 2020: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாங்களுக்கு தடை விதிப்பு


எந்த நேரத்திலும், பந்தல்களில் உள்ள நபர்களின் எண்ணிக்கையை 20-க்கும் குறைவாக என அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் கட்டாயமாக முகமூடிகளை அணிய வேண்டும் மற்றும் அனைவரும் சமூக தொலைதூர விதிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதேபோல விழாக்களில் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.