Hijab Row: ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறை - தீவிரமடையும் போராட்டங்கள்!
Karnataka Hijab Row: இன்று காலை ஹிஜாப் அணிந்து வந்த இளம் பெண்களை கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு எந்த பாடமும் நடத்தப்படாமல் தனி வகுப்பறைகளில் உட்கார வைக்கப்பட்டு உள்ளனர்.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த கல்லூரி மாணவிகளுக்கு தனிஅறை ஒதுக்கி அமர வைத்தனர் கல்லூரி நிர்வாகத்தினர். உடுப்பி மாவட்டம் குந்தப்பூர் அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாததால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. ஹிஜாப் அணியாமல் வந்தால் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கல்லூரி நிர்வாகம் திட்டவட்டமாக கூறியது.
அதனை ஏற்காத கல்லூரி மாணவிகள் தொடர்ந்து சில நாட்களாக கல்லூரி வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த விவகாரம் கர்நாடகா முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. கல்லூரிக்கு வரும் மாணவிகள் பலர் ஹிஜாப் (Hijab) அணிந்து வரத் தொடங்கினர். இதனையடுத்து முஸ்லிம் அல்லாத மாணவ-மாணவிகள் காவித்துணிகளை (Saffron Scarves) உடுத்தி கல்லூரிக்கு வர ஆரம்பித்தனர். இன்னும் சிலர் நீலத் துண்டு அணிந் துவந்து அம்பேத்கர் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் கல்லூரிகளில் மதக் கலவரம் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
கர்நாடகா முழுவதும் கல்லூரிகளில் இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக இஸ்லாமியர்கள், இந்துக்கள் பிரச்சனையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிவது மதத்தை கூடவே சுமந்துவரும் செயல் என வலதுசாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மற்றொரு புறம் எங்கள் உடை எங்கள் உரிமை என ஹிஜாப் அணிபவர்கள் குரல் கொடுக்கின்றனர்.
இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் (Karnataka Hijab Row) தொடர்பாக நாளை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ள நிலையில், இன்று இரண்டு கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்துவந்துள்ள மாணவிகளை தனி வகுப்பறையில் அமர வைத்துள்ளனர்.
ALSO READ | கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்: 17 வயது சிறுமி ‘பகீர்’ புகார்
உடுப்பி மாவட்டத்தில் (Udipi District) உள்ள குந்தாபூரில் உள்ள அரசு ஜூனியர் பியு கல்லூரி (Junior PU college) இன்று காலை ஹிஜாப் அணிந்து வந்த இளம் பெண்களை கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு எந்த பாடமும் நடத்தப்படாமல் தனி வகுப்பறைகளில் உட்கார வைக்கப்பட்டு உள்ளனர். மாணவிகள் கல்லூரி வாயிலில் நிற்பதால் ஏற்படும் பதற்றத்தை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மாணவிகள் ஹிஜாபை அகற்றிய பின்னரே வகுப்புகளுக்குச் செல்ல முடியும் என்று மீண்டும் கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ண வலியுறுத்தியுள்ளார். ஆனால் பெண்கள் வகுப்பில் ஹிஜாபை கழற்றமாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தனர்.
ALSO READ | நாடு தழுவிய சமூகநீதிக் கூட்டமைப்பு: 37 கட்சிகளுக்கு முதலமைச்சர் அழைப்பு
அரசியலமைப்பு எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமையை வழங்கியுள்ளது, அதாவது ஒருவர் தங்கள் மதத்திற்கு ஏற்ப எந்த ஆடையையும் அணியலாம். ஹிஜாப் அணிந்து மாணவர்கள் பள்ளிக்குள் நுழைவதைத் தடை செய்வது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்" என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார்.
அதேநேரத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை அரசு அனுமதிக்காது என்று கர்நாடக பாஜக மாநிலத் தலைவர் நளின் குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நடைபெறும் இந்த மத மோதல் நாடு முழுவதுமான பிரச்சனையாக மாறிவிடக் கூடாது. இதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நாளை முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
ALSO READ | இறந்த மாணவியின் அடையாளத்தை வெளியிட்டதில் தவறில்லை - அண்ணாமலை பகீர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR