உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் தன்களின் ஒரு மாத சம்பளத்தை கேரளா நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 லட்சம் பேர் மீட்கப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


தற்போது மழை நின்றுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன.


போர்க்கால அடிப்படையில் நடந்து வரும் இந்த பணிகளையும், மழை, வெள்ளத்தில் சிக்கியவர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கும் முகாம்களையும் முதலமைச்சர்  பினராயி விஜயன் பார்வையிட்டார். "கேரளாவில் மழை குறைந்து, வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பி வருகின்றனர். இன்னும் 1,465 நிவாரண முகாம்களில் 4.62 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சுத்தம் செய்து தரப்பட்டுள்ளன.


வெள்ளத்தில் சேதமடைந்த பகுதிகளையும், பாலங்கள், சாலைகள் கட்டமைப்பு வசதிகளை மீண்டும் மேம்படுத்தித் தர ஏராளமான நிதி தேவைப்படுகிறது. மாநிலத்தின் மறுக்கட்டமைப்பாக கேரளாவில் வாழும் மக்களும், வெளிநாடுகளில் வாழும் கேரள மக்களும் தங்களின் ஒருமாத ஊதியத்தை மாநிலத்தின் மேம்பாட்டுக்காக அளிக்க வேண்டும்.



நம்முடைய வலிமையை கண்டறிவதுஅவசியம். அனைத்து மக்களாலும் ஒரு மாத ஊதியத்தை அளிப்பது கடினம், ஆதலால், கேரளாவில் வசிக்கும் மக்களும், வெளிநாட்டில் வசிப்பவர்களும் ஒவ்வொரு மாதத்தில் 3 நாட்கள் ஊதியத்தை மாநிலத்தின் மறுகட்டமைப்புக்காக அளிக்கலாம்’’ என தனது மகநூல் பக்கத்தில் கேரளா முதலவர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.