சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சீனாவிலிருந்து வரும் விமானப் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.


இந்நிலையில், சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த முதல் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை இந்தியா தெரிவித்துள்ளது. நோயாளி சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர். ஒரு அறிக்கையில், மாணவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்று PIB தெரிவித்துள்ளது. 



"சீனாவின் வூகான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் கேரளா திரும்பிய நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரானா பாதிக்கப்பட்டுள்ள மாணவர் உடல் நிலை சீராக உள்ளது. இவரை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். 


சீனா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதல் முறையாக இந்தியாவில் ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் இருந்து திரும்பிய மாணவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளான மாணவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.