இந்த ஆண்டு கேரளாவில் பெய்து வரும் கனமழை வழக்கத்தை விட மிகவும் அதிகமாக உள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து வெள்ளம் போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவின் ஐந்து மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனை அடுத்து, தெற்கு கடற்படை கட்டளை (Southern Naval Command (SNC)) மீட்பு நடவடிக்கைகளில் உள்ளூர் நிர்வாகத்திற்கு உதவ தயாராக உள்ளது. வானிலை விமானச் செயல்பாடுகளுக்கு சாதகமாக அமைந்தவுடன் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தத் தயாராக உள்ளன. 


அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், கேரளாவில் அடைமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இடை விடாமல் பெய்து வரும் அடைமழையினால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்த்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Read Also | வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கனமழை 


அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சபரிமலை கோவிலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம், பம்பை ஆற்றில் அபாயகரமான அளவில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. 


மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக சனிக்கிழமை 12 பேர் காணாமல் போயினர். கோட்டயத்தில் கூட்டிக்கல்லில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பதிவாகும் நிலையில், ஐந்து மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை, ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை மற்றும் கேரளாவின் இரண்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) விடுத்துள்ளது.  


Read Also | 23 தமிழக மீனவர்களை விடுவிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு L முருகன் கோரிக்கை


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் அடைமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயிரோடு மண்ணில் புதைந்தனர். தகவல் அறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


நேற்று மாலை பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பீர்மேடு தாலுகா பூவந்தி மலையடிவாரத்தில் இருந்த வீடுகளில் ஐந்து வீடுகள் மூழ்கின. வீடுகளில் இருந்த 7 பேர் உயிரோடு மண்ணில் புதைந்தனர். 


இதுகுறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் மீட்பு பணியை தொடர முடியவில்லை. எனவே, இன்று காலை மீட்பு பணிகள் தொடங்கிய பிறகு தான் மண்ணில் புதைந்த ஏழு பேரின் நிலை என்னவென்பது தெரியவரும்.


ALSO READ |  தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR