பிரதமர் நரேந்திர மோடி, 100வது கிசான் ரயில் சேவையை வீடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விசாயிகளுக்கான தனிப்பட்ட சேவை வழங்கும் இந்த ரயில் மகாராஷ்டிராவின் சங்கோலாவிலிருந்து மேற்கு வங்காளத்தின் ஷாலிமார் வரை செல்லும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில் சேவையை தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி (PM Narendra Modi), “நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு எனது வாழ்த்துக்கள். கோவிட் -19 நெருக்கடி காலத்திலும், கிசான் ரயில் சேவை நெட்வொர்க் கடந்த நான்கு மாதங்களில் விரிவடைந்து இப்போது, 100வது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றார்.


மேலும், கிசான் ரயில் சேவை, விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான மிக முக்கிய முயற்சியாகும் என்றார் பிரதமர் மோடி. 
கிசான் ரயில், எனப்படும் விவசாயிகளுக்கான தனிப்பட்ட ரயில் சேவை.  
கிசான் ரயில் சேவை மூலம், நாடு முழுவதும் விவசாய விளை பொருட்களை விரைவாக கொண்டு செல்லாம்.


இதன் விழாவில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goel) ஆகியோர் கலந்து கொண்டனர்.


கிசான் ரயில், எனப்படும் விவசாயிகளுக்கான இந்த சிறப்பு ரயில் சேவை, என்பது மொபைல் குளிர்பதன சேமிப்பு வசதியை போன்றது. இதன்மூலம் பழங்கள், காய்கறிகள், பால், மீன் போன்ற விரைவில் கெட்டுப் போக கூடிய பொருட்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு, எளிதாக பாதுகாப்பாக, குறிப்பிட்ட நேரத்தில் விரைவாக கொண்டு செல்ல முடியும்.


கிசான் ரயிலுக்கு விவசாயிகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இந்த ரயில் சேவை வாரத்திற்கு ஒரு முறை என்பதில் இருந்து வாரத்தில் மூன்று நாட்களாக அதிகரிக்கப்பட்டது.


காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு செல்வதற்கு மோடி அரசு 50 சதவீத மானியத்தை வழங்கியுள்ளது என பிரதமர் அலுவக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்திய ரயில்வேயின் முதல் கிசான் ரயில் சேவை, 2020 ஆகஸ்ட் 7ம் தேதி  அன்று தொடங்கப்பட்டது. தேவ்லலி முதல் தன்பூர் வரை தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவை பின்னர் முசாபர்பூர் வரை நீட்டிக்கப்பட்டது. 


ALSO READ | டிரைவர் இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ ரயிலை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR