அரசு ஊழியர் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக மாநில லோகாயுக்தா தீர்ப்பளித்த ஒருசில நாட்களில் கேரள உயர்கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அனுப்பியுள்ளார். முதலமைச்சர், தனது கல்வி அமைச்சரின் பதவி விலகல் கடிதத்தை மாநில ஆளுநருக்கு அனுப்பிவிட்டார்.


தான் ராஜினாமா செய்துவிட்டதை கேரள உயர்கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் பேஸ்புக் பதிவில் உறுதிப்படுத்தினார். 


Also Read | வாத்தி கம்மிங் பாடலுக்கு டேவிட் வார்னரின் டான்ஸ் வீடியோ வைரல்


"அதிகார துஷ்பிரயோகம், தனக்கு நெருக்கமானவர்களுக்கு முறைகேடாக பதவியை பயன்படுத்தி ஆதாயம் அளித்தது, பாகுபாடு காட்டியது மற்றும் பதவியேற்கும் போது செய்த உறுதிமொழியை மீறியது என்ற குற்றச்சாட்டுகள் உண்மையானவை" என லோகாயுக்தா கண்டறிந்தது. இந்த விவகாரத்தின் பின்னணியில் இந்த ராஜினாமா கடிதத்தை கேரள மாநில அமைச்சர் அளித்துள்ளார்.


முன்னதாக, தனது பதவியை முறைகேடாக பயன்படுத்திய கே.டி.ஜலீல், கேரள மாநில சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதிக் கூட்டுஸ்தாபன லிமிடெட் நிறுவனத்தில் (Kerala State Minorities Development Finance Corporation Limited) பொது மேலாளராக தனது உறவினர் கே.டி.அதீப்பை நியமித்தார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.


அமைச்சருக்கு எதிரான புகாரை விசாரித்த லோகாயுக்தா நீதிபதி சிரியாக் ஜோசப் மற்றும் ஹருல் உல் ரஷீத் ஆகியோர் அமைச்சர்கள் குழுவில் (Council of Ministers) உறுப்பினராக ஜலீல் தனது பதவியை தொடர்ந்து வகிக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தனர். இருப்பினும், ஜலீல் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்திற்கு (High Court) சென்றார்.


Also Read | வைரலாகும் Anushka Sharmaவின் மனம் மயக்கும் மாயப் புன்னகை புகைப்படம்


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR