சமீபத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. ஆடம்பரப் பொருட்கள் மீது 28 சதவீத ஜிஎஸ்டி விகிதத்தை அரசு பராமரிக்க உத்தேசித்துள்ளதாக வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் திங்கள்கிழமை தெரிவித்தார். இருப்பினும், மற்ற மூன்று வகை வரிகளை இரண்டு வகைகளாக மாற்றுவது குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சரக்கு மற்றும் சேவை வரியின் (GST) விகிதங்களை குறித்து ஐந்து வருட வரி முறைக்குப் பிறகு சுயபரிசோதனை செய்ததன் அடிப்படையில் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பஜாஜ் இங்கு நடந்த தொழில்துறை அமைப்பான அசோசேமின் நிகழ்வில் கூறினார். அதே நேரத்தில், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து அவர் ஒரு முக்கிய கருத்தை தெரிவித்தார்.


பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையில், மத்திய, மாநில அரசுகளின் வருவாயில் எரிபொருளுக்கான வரி பெரும்பகுதி என்பதால், அதில் யோசித்து எடுக்கப்பட வேண்டிய முடிவு என்றார். இதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்றார். 


மேலும் படிக்க | Education Loan: பெற்றோர்களின் கவனத்திற்கு; உங்கள் பிள்ளைகளுக்கு சிக்கல்


ஜிஎஸ்டியின் வரி கட்டமைப்பைப் பொறுத்தவரை, 5, 12, 18 மற்றும் 28 சதவீத விகிதங்களில், 28 சதவீத விகிதத்தை நாங்கள் பராமரிக்க வேண்டும் என்று பஜாஜ் கூறினார். வருமான சமத்துவமின்மை பொருளாதாரத்தில், அதிக வரி விகிதங்கள் விதிக்கப்பட வேண்டிய சில ஆடம்பர பொருட்கள் உள்ளன என குறிப்பிட்டார்.


இருப்பினும், மற்ற மூன்று வரி விகிதங்களை இரண்டு விகிதங்களில் சரிசெய்யலாம், என்றார். இதன் மூலம் நாடு எவ்வாறு முன்னேறுகிறது என்பதையும், இந்த விகிதங்களை ஒரு விகிதத்தில் மட்டும் குறைக்க முடியுமா இல்லையா என்பதையும் பார்க்கலாம் என்றார். இது மிகப்பெரிய சவாலாகும். ஜிஎஸ்டி முறையின் கீழ் நான்கு வரி விகிதங்கள் உள்ளன. இவற்றில் அத்தியாவசியப் பொருட்களுக்கு மிகக் குறைந்த அளவாக ஐந்து சதவீத வரி விதிக்கப்படுகிறது. 


அதே சமயம் ஆடம்பர பொருட்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியின் மற்ற இரண்டு விகிதங்கள் 12 மற்றும் 18 சதவீதம். இது தவிர, தங்கம், நகைகள் மற்றும் ரத்தினங்களுக்கு மூன்று சதவீத சிறப்பு விகிதமும், பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களுக்கு 1.5 சதவீத சிறப்பு ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.


வரி விகிதங்களை ஆராய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் அமைச்சர்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்துள்ளது. அதன் இறுதி அறிக்கையை சமர்பிக்க  அமைச்சர்கள் குழிவிற்கு கூடுதலாக மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி முறை அமலுக்கு வந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜிஎஸ்டி விகிதக் கட்டமைப்பு எவ்வாறு உருவாகியுள்ளது என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது என்று வருவாய்த்துறை செயலாளர் கூறினார். 


இது தவிர, எந்தெந்த பொருட்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும், எந்தெந்த பொருட்களை குறைந்த அடுக்கில் வைக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை செய்ய வேண்டும் என்று பஜாஜ் கூறினார். 


மேலும் படிக்க | குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் பெற சுலப வழிமுறைகள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR