நியூடெல்லி: இந்தியாவில் கல்வியில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில், சிறுபான்மை கல்வி நிறுவனங்களில், அரசாங்கத்தால் பகுதியளவு நிதியளிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கட்டாய மத போதனையை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் (AMU), முழு அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை நிறுவனத்தைப் பற்றி குறிப்பாக தீர்ப்பில் விவாதிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சூர்ய காந்த், ஜே பி பர்திவாலா, தீபங்கர் தத்தா, மனோஜ் மிஸ்ரா, சதீஷ் சர்மா ஆகியோர் அடங்கிய சட்ட அமர்வு, சிறுபான்மை நிறுவனங்களை அரசு அங்கீகரித்தவுடன், அதன் மாணவர்களுக்கு மத போதனைகளை கட்டாயமாக்க முடியாது என்று தெளிவுபடுத்தியது.



பல தசாப்தங்களாக சட்ட சிக்கலில் சிக்கியுள்ள AMU இன் சிறுபான்மை அந்தஸ்து
1967 ஆம் ஆண்டு எஸ் அஜீஸ் பாஷா மற்றும் யூனியன் ஆப் இந்தியா வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஒரு மத்திய பல்கலைக்கழகமாக இருப்பதால், அதை சிறுபான்மை நிறுவனமாக கருத முடியாது என்று கூறியது. இருப்பினும், 1981 இல் AMU (திருத்தம்) சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியபோது நிலைமை மாறியது. 


மேலும் படிக்க | Padma Awards: 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு! நடிகர் விஜயகாந்த்துக்கு ‘பத்ம பூஷன்’ விருது


ஜனவரி 2006 இல், அலகாபாத் உயர் நீதிமன்றம் 1981 சட்டத்தின் விதியை ரத்து செய்தது, இதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து நிலைமை மாறியது. அன்று மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. அதேபோல பல்கலைக்கழகமும் தனி மனு தாக்கல் செய்தது.


2016இல், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான NDA அரசாங்கம், உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் UPA அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை திரும்பப் பெறுவதாக தெரிவித்தது. இப்படி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்து தொடர்பாக நீண்ட நாட்களாக இருந்த சிக்கலுக்கு தற்போது உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 


சிறுபான்மை அல்லது சிறுபான்மை அல்லாத அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், அரசாங்க மானியங்கள் பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களும், மதங்கள் தொடர்பான கருத்துக்களை கட்டாயயமாக போதிக்கும் மத போதனை ரத்து என்ற தீர்ப்பு பொருந்தும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சூர்ய காந்த், ஜே பி பர்திவாலா, தீபங்கர் தத்தா, மனோஜ் மிஸ்ரா, சதீஷ் சர்மா ஆகியோர் அடங்கிய சட்ட அமர்வு தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | கங்கையில் நீராடினால் சரியாகிடும்.. மூடநம்பிக்கையால் 5 வயது அப்பாவி சிறுவன் பலி


எந்தவொரு அரசாங்க மானியத்தையும் பெறும் சிறுபான்மை நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு செய்யும் மாணவர்களுக்கு மட்டுமே மத போதனைகளை வழங்க முடியும் என்று நீதிபதி கன்னா வலியுறுத்தினார். “முழுமையாக அரசால் நிதியளிக்கப்படும் சிறுபான்மை நிறுவனம், அதன் மாணவர்களுக்கு எந்த மத போதனையையும் வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறோம். எந்தவொரு மானியத்தையும் கல்வி நிறுவனம் அரசிடம் இருந்து பெற்றால், அது அந்த நிறுவனத்தின் ஒரு சதவீதமாக இருந்தாலும், சிறுபான்மை நிறுவனங்கள் தன்னார்வத் தொண்டு செய்யும் மாணவர்களுக்கு மட்டுமே மத போதனைகளை வழங்க முடியும்” என்று நீதிபதி கன்னா தெளிவுபடுத்தினார்.


அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் (AMU) நிறுவுதல் மற்றும் அதன் சிறுபான்மை அந்தஸ்து குறித்து வாதிட்ட, சொலிசிட்டர் ஜெனரல் பல்கலைக்கழகத்தின் இருப்பு நிதிக்கு பல சமூகங்கள் பங்களித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.  AMU பெற்ற குறிப்பிடத்தக்க அரசாங்க மானியங்களையும் சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.


தற்போது, AMU ஆண்டுதோறும் 1,570 கோடி ரூபாய் உதவித்தொகையை அரசாங்கத்திடம் இருந்து பெறுகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனத்தின் அந்தஸ்தைப் பெற்று, புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது அலிகர் பல்கலைக் கழகம் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | தீவிரவாத தொடர்பு குறித்த பாகிஸ்தானின் பிரச்சாரத்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ