Kirti Chakra Award For Late Captain Anshuman Singh: நாட்டுக்காக தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் கீர்த்தி சக்ரா விருது, கடந்தாண்டு இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள சியாச்சின் பகுதியில் நடந்த மீட்பு நடவடிக்கையின் போது உயிரிழந்த கேப்டன் அன்ஷுமன் சிங்குக்கு வழங்கப்பட்டது. ராணுவ வீரர் ஒருவர் கடமையின் போது உயிர்நீத்த ஒப்பற்ற தியாகத்தை போற்றும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது. ராணுவ வீரர்களின் வீர தீர செயலுக்காக வழங்கப்படும் இரண்டாவது உச்சபட்ச விருது இதுவாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேப்டன் அன்ஷுமன் சிங் வீரமரணம்


கடந்தாண்டு ஜூலை 19ஆம் தேதி அன்று இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் சியாச்சின் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்திற்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட மின்கசிவால் கடுமையான தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சம்பவ இடத்தில் சிக்கிய சக ராணுவ வீரர்களை கேப்டன் அன்ஷுமன் சிங் துணிச்சலாக சென்று அவர்களை மீட்டு வந்தார்.


தொடர்ந்து, தீ அருகில் இருந்த பகுதிகளுக்கும் பரவின. குறிப்பாக, மருந்துகள் வைக்கப்பட்டுள்ள பகுதியிலும் தீ பரவியதை அடுத்து, பல உயிர் காக்கும் மருத்துகளை மீட்பதற்காக விரைந்த கேப்டன் அன்ஷுமன் சிங் தீயில் சிக்கினார். இதில் அவரது உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். கேப்டன் அன்ஷுமன் சிங்கின் இந்த வீரமரணத்தை போற்றும் விதமாகவே இந்த கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. 


பார்த்ததும் காதல்...


இந்நிலையில், மறைந்த கேப்டன் அன்ஷுமன் சிங்கிற்கு அறிவிக்கப்பட்ட கீர்த்தி சக்ரா விருதை, அவரின் சார்பாக அவரது மனைவி ஸ்மிருதி சிங் நேற்று (ஜூலை 6) குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றார். டெல்லி குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. விருது விழாவுக்கு பின் ஊடகத்திடம் பேசிய மறைந்த கேப்டன் அன்ஷுமன் சிங்கின் மனைவி ஸ்மிருதி சிங் மிகவும் உருக்கமாக பேசினார்.


மேலும் படிக்க | ’மிசன் குஜராத்’ ஆட்டத்தை இன்றே தொடங்கிய ராகுல் காந்தி...! பிரதமர் மோடியை தோற்கடிப்பேன் என சபதம்


அப்போது பேசிய அவர்,"நாங்கள் இருவரும் கல்லூரியின் முதல் நாளிலேயே ஒருவருக்கொருவர் அறிமுகமானோம். நான் நாடகத்தனமாக கூறவில்லை, எங்களுக்குள் முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்தது. சில மாதங்களிலேயே அவருக்கு ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதாவது, நாங்கள் இருவரும் சந்தித்தது பொறியியல் கல்லூரியில், ஆனால் அவருக்கு மருத்துவ கல்லூரியிலும் இடம் கிடைத்தது. அவர் அதிபுத்திசாலி ஆவார். நாங்கள் சந்தித்து ஒரு மாதமே ஆகியிருந்தாலும், அடுத்த 8 ஆண்டுகளுக்கு நான் ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக்கொள்ளாமல் தொலைத்தூர காதல் உறவில் இருந்தோம். அதன்பின்னர், அடுத்த கட்டம் குறித்து யோசித்து திருமணம் செய்துகொண்டோம்" என்றார். 


ஜூலை 18 மற்றும் ஜூலை 19


நாட்டிற்காக தியாகம் செய்து உயிரிழந்த கணவனுக்கும் தனக்கும் உண்டான காதல் கதையை சொல்லும்போது அவரால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. அன்ஷுமன் சிங் ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பில் பட்டம் பெற்ற பின்னர் இருவருக்கு இடையே கடந்தாண்டு பிப்ரவரி மாதம் திருமணமானது. இருவருக்கும் குழந்தை இல்லை. மேலும், அன்ஷுமன் சிங் உயிரிழப்பதற்கு முந்தைய நாள்தான் தங்களின் வருங்கால வாழ்க்கை குறித்து தங்களுள் பேசிக்கொண்டிருந்ததாக ஸ்மிருதி சிங் கூறினார். 


ஸ்மிருதி சிங் தொடர்ந்து பேசுகையில்,"கடந்தாண்டு ஜூலை 18ஆம் தேதிதான் அடுத்த 50 ஆண்டுகளில் எங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து நாங்கள் பேசிக்கொண்டோம். வீடு கட்டுவது குறித்தும், குழந்தை பெற்றுக்கொள்வது குறித்தும் என பல விஷயங்களை அன்று பேசியிருந்தோம். ஆனால், ஜூலை 19ஆம் தேதி காலையில் எழுந்த உடன் அவர் உயிரிழந்த செய்தியே எனக்கு கிடைத்தது"  என்று தழுதழுத்த குரலில் அந்த வாக்கியத்தை நிறைவு செய்ய இயலாமல் கண்ணீர் விட்டு வருந்தினார்.


பெரும் தியாகம் 


மீண்டும் தன்னை தேற்றிக்கொண்டு பேச்சை தொடர்ந்த அவர்,"முதல் 7-8 மணிநேரத்திற்கு என்ன நடந்தது என்பதே புரியவில்லை, நடந்ததை எங்களால் ஏற்கவே முடியவில்லை. இப்போது வரை எங்களால் அவரின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அது உண்மையாக இருக்கக் கூடாதா என்றே நாங்கள் யோசிக்கிறோம். ஆனால், இப்போது இந்த கீர்த்தி சக்ரா விருதை என் கையில் பெற்ற உடன்தான், அவர் உயிரிழந்தது உண்மைதான் என தோன்றுகிறது. 


பரவாயில்லை, அவர் ஒரு நாயகனாக திகழ்கிறார். எங்களின் சின்ன வாழ்வில் நாங்கள் இதனை சமாளித்துக்கொள்வோம், ஏனென்றால் அவர் பெரிய விஷயங்களை செய்திருக்கிறார். மற்ற மூன்று ராணுவத்தினரின் குடும்பங்களை காப்பற்றி அவர் தனது வாழ்க்கையும், குடும்பத்தையும் தியாகம் செய்திருக்கிறார்..." என முடித்தார். 


மேலும் படிக்க | 121 பேரை காவு வாங்கிய ஹத்ராஸ் சம்பவம்... வாய் திறந்தார் போலே பாபா - என்ன சொன்னார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ