Viral Video Of A Lecturer Marrying Her Student : சமூக வலைதளங்கில் 30 வினாடிகள் வரும் பல ரீல்கள், “இப்படியெல்லாம் கூட நடக்குதா?” என நம்மை யோசிக்க வைக்கின்றன. அண்ணனை தங்கை திருமணம் செய்து கொள்வது, பெற்ற மகளை தந்தை திருமணம் செய்து கொள்வது என இப்படி விசித்திரமாக வலம் வரும் வீடியோக்களுக்கு பஞ்சமே கிடையாது. இப்படிப்பட்ட வீடியோக்கள், யாரை போய் சேர்கிறதோ இல்லையோ இளம் தலைமுறையினரிடம் சென்று சேர்ந்து அவர்களையும் பலவாறாக யோசிக்க வைக்கின்றன. அப்படிப்பட்ட வீடியோக்களுள் ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரல் வீடியோ:


கொல்கத்தாவில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வங்க தேசத்தில் இருக்கும் ஒரு அரசு பல்கலைக்கழகத்தில், ஒரு ஆசிரியையும், மாணவனும் மாலை மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம், அந்த பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையில் (psychology department) நடந்துள்ளது. இந்த வீடியோவில் முதலில் அந்த ஆசிரியை மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டுள்ளது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரது முதலாம் ஆண்டு மாணவர் அவருக்கு மாப்பிள்ளையாக வந்து நெற்றியில் திலகமிடுகிறார். இந்த வீடியோ, அதன் பின்னர் இணையத்தில் வைரலாகி பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை மகிழ்ச்சியாக அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்தும் கொண்டிருந்தனர். 



டிராமாவா?


இந்த வீடியோ பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் இந்த ஆசிரியை மீதும் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதாக கூறி, விசாரணைக்குழுவை அமைத்தது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள அந்த ஆசிரியை, உளவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு ஆவணப்படம் காட்டுவதற்காக இவ்வாறு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். இருப்பினும், இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்த விசாரணை முடியும் வரை, விடுப்பில் இருக்குமாறு அந்த ஆசிரியைக்கு கல்லூரி நிர்வாகம் அறிவுருத்தியுள்ளது.


மேலும் படிக்க | சீச்சீ! அப்பாவே மகளை திருமணம் செய்து கொண்ட அவலம்..என்னங்க நடக்குது இங்க?


மேலும் படிக்க | இறந்த ஆண் பாம்பை பார்த்து துடிதுடித்த பெண் பாம்பு - வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ