Republic day Updates: தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

Fri, 26 Jan 2024-1:32 pm,

Republic day Updates: இந்தியாவின் 75வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மூவர்ண கொடியை ஏற்றினார்

Republic day Updates: இந்தியாவின் 75வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மூவர்ண கொடியை ஏற்றினார். இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். விழாவின்போது பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். அந்தவகையில், நாளை டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். 

Latest Updates

  • Republic day Live Updates: குடியரசு தின விழா அணி அசத்திய மகளிர் காவல்துறை

    Republic day 2024:  மத்திய ஆயுதப்படை மகளிர் காவல் துறையினர்,  மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி அசத்தினர்.

  • Republic day Live Updates: குடியரசு தின விழா அணி வகுப்பில் ஜார்க்கண்ட் வாகனம் 

    Republic day 2024: டேசர் சில்க் தயாரிப்பில் பழங்குடியின பெண்களின் பங்களிப்பை காட்சிப்படுத்தி ஜார்க்கண்ட் மாநில வாகனம் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்றது.

  • Republic day Live Updates: குடியரசு தின விழா அணி வகுப்பில் குஜராத் வாகனம் 

    Republic day 2024: குஜராத்தின் சுற்றுலா துறையை பறைசாற்றும் வகையிலான கருப்பொருளுடன் அம்மாநில வாகனம் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்றது. 

  • Republic day Live Updates: குடியரசு தின விழா அணி வகுப்பில் லடாக் வாகனம் 

    Republic day 2024: பெண்கள் ஐஸ் ஹாக்கிப் போட்டிகளில் பங்கேற்பதை பிரதிபலிக்கும் விதமாக லடாக் ஐஸ் மகளிர் ஹாக்கி அணி விளையாடும் கருப்பொருள் இடம்பெற்றது. 

  • Republic day Live Updates: குடியரசு தின விழா அணி வகுப்பில் ராஜஸ்தான் வாகனம் 

    Republic day 2024: ராஜஸ்தான் மாநிலத்தின் பெண்களின் கைவினைத் தொழில்களின் வளர்ச்சியின் நிரூபிக்கும் விதமாக, அம்மாநில வாகனம் குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்கேற்றது. 

  • Republic day Live Updates: குடியரசு தின விழா அணி வகுப்பில் உத்தரப்பிரதேச வாகனம் 

    Republic day 2024: அயோதி ராமர் கோயிலின் திறப்பு விழா மற்றும் குழந்தை பருவ ராமர் வடிவத்தைக் காட்டும் வகையில், குடியரசு தின விழா அணி வகுப்பில் உத்தரப்பிரதேச வாகனம் சென்றது 

  • Republic day Live Updates: குடியரசு தின விழா அணி வகுப்பில் சட்டீஸ்கர் வாகனம் 

    Republic day 2024: பழங்காலத்திலிருந்தே பழங்குடி சமூகங்களில் இருக்கும் ஜனநாயக உணர்வு மற்றும் பாரம்பரிய ஜனநாயக விழுமியங்களை சட்டீஸ்கர் அரசின் குடியரசு தின விழா அணிவகுப்பு வாகனம் பிரதிபலித்தது. பாரம்பரிய கலைகள் மற்றும் கைவினைப்பொருட்களை சித்தரிக்கும் வகையில் வாகனம் அலங்கரிக்கப்பட்டது.

  • Republic day Live Updates: குடியரசு தின விழா அணி வகுப்பில் ஒடிசா வாகனம் 

    Republic day 2024: பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் மாநிலத்தின் வளமான கைவினை மற்றும் கைத்தறி துறையின் சாதனைகளை சித்தரித்து, ஒடிசா மாநில வாகனம் குடியரசு தின விழா 2024 அணி வகுப்பில் பங்கேற்றது. 

  • Republic day Live Updates: குடியரசு தின விழா அணி வகுப்பில் மணிப்பூர் வாகனம் 

    Republic day 2024: மணிப்பூர் மாநிலத்தில் 500 ஆண்டுகள் பழமையான, முற்றிலும் பெண்களால் நடத்தப்படும் பெண்களின் சந்தையை அம்மாநில வாகனம் குடியரசு தின விழா அணி வகுப்பில் பறைசாற்றியது.

  • Republic day Live Updates: குடியரசு தின விழா அணி வகுப்பில் மத்திய பிரதேச வாகனம் 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    Republic day 2024: மத்திய பிரதேசத்தின் பெண்களின் முற்போக்கு மற்றும் தன்னம்பிக்கையை பறைசாற்றும் வகையில் அம்மாநில வாகனம் பயணித்தது

     

  • Republic day Live Updates: குடியரசு தின விழா அணி வகுப்பில் அருணாச்சலப் பிரதேச வாகனம் 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    Republic day 2024: கர்தவ்யா பாதையில் அருணாச்சலப் பிரதேசத்தின் வாகனம், அம் மாநிலத்தில் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த இடமான சிங்சுங் புகுன் கிராம சமூகக் காப்பகத்தை பறைசாற்றி பயணித்தது.

     

  • Republic day Live Updates: குடியரசு தின விழா அணி வகுப்பில் ஹரியானா வாகனம் 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    Republic day 2024: பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற கருப்பொருளில் ஹரியானா மாநில வாகனம் கலந்து கொண்டது. 

     

  • Republic day Live Updates: கடமை பாதையில் அணி வகுத்த புரஸ்கார் பெற்றவர்கள் 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இந்த குடியரசு தினத்தில் கர்தவ்ய பாதையில் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் பெற்றவர்கள் அணி வகுப்பில் பங்கேற்றனர். வீரம், கலை மற்றும் கலாச்சாரம், புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் 6 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது.

     

  • Republic day Live Updates: ஒட்டகபடை அணிவகுப்பு

    குடியரசு தின விழா அணி வகுப்பில் முதன்முறையாக ஒட்டக்கபடை அணிவகுப்பில் பங்கேற்றது. 

  • Republic day Live Updates: குடியரசு தின அணி வகுப்பில் பெண் வீரர்கள்.!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    75வது குடியரசு தினத்தன்று கர்தவ்ய பாதையில் பெண் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

     

  • Republic day Live Updates: அணிவகுப்பில் முதன்முறையாக டெல்லி மகளிர் காவல்துறை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    டெல்லி காவல்துறையின் அனைத்து மகளிர் இசைக்குழு முதன்முறையாக குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது. பேண்ட் மாஸ்டர் சப் இன்ஸ்பெக்டர் ருயாங்குனுவோ கென்ஸ் தலைமை தாங்கினார். இவர் அணிவகுப்பில் பங்கேற்கும் சிறந்த அணிவகுப்புக் குழுவை பரிசை 15 முறை வென்றவர்.

     

  • Republic day Live Updates: விமானப்படை அதிகாரிகள் அணிவகுப்பு

    குடியரசு தின விழா 2024 அணிவகுப்பில் இந்திய விமானப்படை டேபிள்யூ பங்கேற்றது. 'பாரதிய வாயு சேனா: சக்ஷம், சஷக்த், ஆத்மநிர்பர்' என்ற கருப்பொருளுடன், டேப்லோ கமாண்டர்கள் Flt லெப்டினன்ட் அனன்யா சர்மா மற்றும் அதிகாரி அஸ்மா ஷேக் ஆகியோர் அணி வகுப்பில் பங்கேற்றனர்.

  • Republic day Live Updates: முதன்முறையாக பெண்கள் இசைக்குழு

    கர்தவ்யா பாதையில் முதன்முறையாக, BSF மகிளிர் இசைக்குழு மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் பெண்கள் குழு அணி வகுப்பில் பங்கேற்றது. 

  • Republic day Live Updates: இந்திய விமானபடை பெண்கள் அணி

    இந்திய விமானப்படை அணிவகுப்புக் குழுவானது ஸ்க்வாட்ரான் லீடர் ரஷ்மி தாக்கூர் தலைமையில், ஸ்க்வாட்ரான் லீடர் சுமிதா யாதவ், ஸ்க்வாட்ரான் லீடர் பிரதிதி அலுவாலியா மற்றும் ஃப்ளைட் லெப்டினன்ட் கிரித் ரோஹில் ஆகியோர் கடமை பாதையில் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

  • Republic day Live Updates: இந்திய கடற்படையின் வலிமை

    இந்திய கடற்படை 'நாரி சக்தி மற்றும் 'ஆத்மநிர்பர்தா' ஆகியவற்றின் வலிமையை உலகுக்கு எடுத்துக் காட்டும் விதமாக, விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் கடற்படை கப்பல்களான டெல்லி, கொல்கத்தா மற்றும் ஷிவாலிக் மற்றும் கலவாரி கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல், குடியரசு தின விழா அணி வகுப்பில் பெருமையை பறைசாற்றின. 

  • Republic day Live Updates: கர்தவ்யா பாதையில் முதன்முறையாக அணிவகுப்பு 

    ராணுவப் பல் மருத்துவப் படையைச் சேர்ந்த கேப்டன் அம்பா சமந்த், இந்தியக் கடற்படையைச் சேர்ந்த சர்ஜ் லெப்டினன்ட் காஞ்சனா, Flt லெப்டினன்ட் திவ்ய பிரியா ஆகியோருடன் மேஜர் ஸ்ருஷ்டி குல்லர் தலைமையில் அனைத்துப் பெண்களும் அடங்கிய ஆயுதப்படை, மருத்துவ சேவைகள் இந்திய விமானப்படை.

  • Republic day Live Updates: மகளிர் முப்படையினர் குழு அணி வகுப்பு

    அக்னிவேர்ஸ் எனப்படும் அனைத்து மகளிர் முப்படையினர் குழு குடியரசு தின விழா 2024, இன்று கடமை பாதையில் பெருமையுடன் அணிவகுத்துச் சென்றது. கர்தவ்யா பாதையில் அனைத்து முப்படை பெண் ராணுவ வீரர்களும் அணிவகுப்பது இதுவே முதல் முறை.

  • Republic day Live Updates: நாட்டிற்கு பெருமை சேர்த்த ரைபிள்ஸ் அணி

    குடியரசு தின விழா 2024 அணிவகுப்பில் 20வது பட்டாலியனின் லெப்டினன்ட் சன்யம் சவுத்ரி தலைமையில் ராஜ்புதானா ரைபிள்ஸ் அணி, அணி வகுப்பில் வந்தது. இந்த ரெஜிமென்ட், 10 அர்ஜுனா விருதுகளை வென்ற அரிய சிறப்பை பெற்றுள்ளது. சுபேதார் நீரஜ் சோப்ரா மற்றும் சுபேதார் தீபக் புனியா ஆகியோர் ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

  • Republic day Live Updates: இந்திய ராணுவத்தின் பழமையான காலாட்படை படைப்பிரிவு அணிவகுப்பு

    மெட்ராஸ் ரெஜிமென்ட், இந்திய ராணுவத்தின் பழமையான காலாட்படை படைப்பிரிவு குடியரசு தின விழாவில் கர்தவ்யா பாதையில் அணிவகுத்தது. கடமையைச் செய்து இறப்பதே பெருமை என்ற முழக்கத்துடன் அணி வகுப்பில் பங்கேற்றது. 

  • Republic day Live Updates: பீரங்கி படையின் கம்பீர அணிவகுப்பு

    கர்தவ்யா பாதையில் 262 ஃபீல்ட் ரெஜிமென்ட்டின் லெப்டினன்ட் பிரியங்கா சேவ்தா தலைமையிலான 1890 ராக்கெட் ரெஜிமென்ட்டில் இருந்து பீரங்கி படையின் பினாகாவின் பிரிவு அணிவகுப்பு

  • Republic day Live Updates: மொபைல் ட்ரோன் ஜாம்மர் அணி வகுப்பு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ராணுவத்தின் 11 எலக்ட்ரானிக் வார்ஃபேர் பட்டாலியனின் லெப்டினன்ட் கர்னல் அங்கிதா சௌஹான், மொபைல் ட்ரோன் ஜாம்மர் சிஸ்டத்தின் பிரிவை வழிநடத்தினார்.

     

  • Republic day Live Updates: குடியரசு தலைவருக்கு ராஜ மரியாதை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    நாட்டின் 75வது குடியரசு தின விழா கொடியை ஏற்ற வருகை தந்த குடியசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ராஜ மரியாதை கொடுக்கப்பட்டது. 

     

  • Republic day Live Updates: குடியரசு தலைவரை வரவேற்ற பிரதமர் 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    குடியரசு தின விழாவில் கர்தவ்யா பாதையில் அதிபர் திரௌபதி முர்மு மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி வரவேற்றார்.

     

  • Republic day Live Updates: குதிரைப்படை அணிவகுப்பு

    நாட்டின் பழமையான குதிரைப்படை அணிவகுப்பு டெல்லி கடமை பாதையில் கம்பீரமான முறையில் நடைபெற்றது. 

  • Republic day Live Updates: இந்திய ராணுவங்களின் அணிவகுப்பு

    குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி கடமை பாதையில் இந்திய ராணுவ வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து, இந்தியாவின் வலிமையை உலகுக்கு பறைசாற்றின.

  • Republic day Live Updates: வீர தீர செயலுக்கான விருதுகள் வழங்கிய குடியரசு தலைவர்

    நாட்டின் 75வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் ஜனாதிபதி திரவு முர்மு தேசிய கொடி ஏற்றினார். இதன்பிறகு வீர தீர செயல்களுக்கான விருதுகளை வழங்கி சாதனையாளர்களை கவுவரவித்தார்.

  • Republic day Live Updates: டெல்லியில் கொடி ஏற்றினார் திரவுபதி முர்மு

    நாட்டின் 75வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் ஜனாதிபதி திரவு முர்மு தேசிய கொடி ஏற்றினார். இந்த விழாவில் பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

  • Republic day Live Updates: கோவை, தஞ்சாவூர், திண்டுக்கல் கொண்டாட்டம்

    நாட்டின் 75வது குடியரசு தின விழாவையொட்டி கோவை, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தேசிய கோடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. 

  • Republic day Live Updates: சமாதான புறா பறக்கவிட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்

    திருப்பத்தூர்  மாவட்ட ஆயுதப்படை  மைதானத்தில் நடைபெற்ற 75வது குடியரசு தின விழாவில்  மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடியை ஏற்றிவைத்து  மரியாதை செலுத்தினார். மூவண்ண பலூன்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பறக்க விட்டனர் அதேபோல் சமாதான புறாவையும் பறக்க விட்டனர். இவ்விழாவில் கமோன்டோ படையினரின் வீரதீர செயல் சாகாச நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.

  • Republic day Live Updates: நாமக்கல் குடியரசு தின விழா கொண்டாட்டம்

    நாமக்கல்லில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, காவல்துறையை சேர்ந்த 34 காவல்துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும், பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 287 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களையும், பள்ளிக்கல்வித்துறை சார்பாக 4 முன்னாள் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களையும் மாவட்ட ஆட்சியர் உமா வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய  42 காவல்துறையினருக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது

  • Republic day Live Updates: இந்திய மக்களுக்கு பிரான்ஸ் அதிபர் வாழ்த்து

    நாட்டின் 75வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்திருக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

  • Republic day Live Updates: டெல்லியில் தேசிய கொடி ஏற்றிய மக்களவை சபாநாயகர்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    டெல்லியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

     

  • Republic day Live Updates: ஆயி அம்மாளுக்கு சிறப்பு பரிசு

    மதுரையில் அரசு பள்ளிக்கு நிலத்தை தானமாக கொடுத்த ஆயி அம்மாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பரிசு வழங்கி கவுரவித்தார்.

  • Republic day Live Updates: திருவள்ளூவருடன் தொடங்கிய அணி வகுப்பு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

    சென்னையில் கலைநிகழ்ச்சிகள் முடிந்தவுடன் குடியரசு தின வாகன அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவள்ளூவரின் வாகனம் முதலாவதாக வந்தது. அதில், அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் இயல்பு என்ற குறள் இடம்பெற்றிருந்தது. 

  • Republic day Live Updates: ஏ.ஆர்.ரகுமான் குடியரசு தின வாழ்த்து

    நாட்டின் 75வது குடியரசு தின விழாவையொட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

  • Republic day Live Updates: எதிர்காலத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம் - காங்கிரஸ்

    சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை மீண்டும் நிலைநாட்டவும் காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், என அனைவருக்கும் அதிகாரம் அளித்து அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்க இந்த குடியரசு தினத்தில் உறுதிமொழி ஏற்போம். அப்போதுதான் நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும். இதில் அரசியல் சாசனம் வெல்லும் - இதில் இந்தியா வெல்லும் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். 

  • Republic day Live Updates: காங்கிரஸ் தலைவர் குடியரசு தின வாழ்த்து

    நாட்டின் 75வது குடியரசு தின விழாவையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், நமது அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள், சமூக நீதி மற்றும் அரசியல் உரிமைகளை சமமாக வழங்கியுள்ளது. ஆனால், இன்று இந்த உரிமைகள் அரசாலேயே தாக்கப்படுகின்றன என விமர்சித்துள்ளார்.

  • Republic day Live Updates: நல்லாட்சிக்கு உதாரணம் ராமர் ஆட்சி - ஆளுநர் ஆர்.என்.ரவி

    குடியரசு தின விழாவையொட்டி தமிழ்நாட்டு மக்களுக்காக உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நல்லாட்சிக்கு உதாரணம் ராமர் ஆட்சி என தெரிவித்துள்ளார். ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்ததன் மூலம் நாடு முழுவதும் புது உற்சாகம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  • Republic day Live Updates: ஜேபி நட்டா கொடியேற்றினார்

    குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஜேபி நட்டா தேசிய கொடியை ஏற்றினார்.

  • Republic day Live Updates: பிரதமர் மோடி வாழ்த்து

    குடியரசு தின விழாவையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவரவர் துறைகளில் அளித்த பங்களிப்புகள் போற்றப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

  • Republic day Live Updates: ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    குடியரசு தினவிழாவையொட்டி நாக்பூரில் இருக்கும் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

     

     

  • Republic day Live Updates: முப்படைகளின் அணி வகுப்பு

    சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பிறகு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டார்.

  • Republic day Live Updates: அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு

    சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

  • Republic day Live Updates: ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவல்

    சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றும்போது ஹெலிக்காப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.  

  • Republic day Live Updates: ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியேற்றினார்

    சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

  • Republic day Live Updates: குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடக்கம்

    தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கியது.

  • Republic day Live Updates: தமிழ்நாடு அரசின் குடியரசு தின விழா விருதுகள் அறிவிப்பு

    குடியரசு தின விழாவையொட்டி தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறந்த காவல்நிலையத்துக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது முதல்பரிசு மதுரை மாநகரம், இரண்டாம் பரிசு நாமக்கல் மாவட்டம், மூன்றாம் பரிசு பாளையங்கோட்டை காவல் நிலையங்களுக்கு வழங்கப்படுகிறது. 

  • Republic day Live Updates: பிரதமர் மோடி வாழ்த்து

    75வது குடியரசு தின விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி

  • Republic day Live Updates: 100 பெண் கலைஞர்கள் பங்கேற்பு

    75வது குடியரசு தின அணிவகுப்பு பெண்களை மையமாக வைத்து நடைபெறுகிறது. இந்திய இசைக்கருவிகளுடன் 100 பெண் கலைஞர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

  • Republic day Live Updates: பத்ம விருதுகள் பெறுவோரின் பட்டியல்..!

    இந்தியாவின் முதல் பெண் யானை பாகன் பார்பதி பரூவா , பழங்குடியினர் நலனுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்ட ஜெகேஷ்வர் யாதவ், 30 லட்சம் மரக்கன்றுகளை நட்டதோடு, சுய உதவி குழுக்கள் ஆரம்பித்து பெண்களுக்கு ஊக்கமளித்த சாமி முர்மு, ஆதரவற்றோருக்காக சேவை செய்த குர்மீந்தர் சிங், பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஈடுபட்ட சத்யநாராயணா பெலேரி, சூழலியலாளர் துஹ்கு மஞ்சி, இயற்கை விவசாயி கே.செல்லம்மாள் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • Republic day Live Updates: வள்ளி கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது

    தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வந்த கலையில் வழக்கத்தை உடைத்து பெண்களுக்கு வள்ளி கும்மி பயிற்சி அளித்ததற்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.

  • Republic day Live Updates: பத்ம விருதுகள் அறிவிப்பு

    விஜயகாந்த், சிரஞ்சீவி, மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர்களுக்கும் 2024 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.

  • Republic day Live Updates: சென்னையில் கொடியேற்றும் ஆளுநர்

    குடியரசு தினத்தையொட்டி, சென்னையில் இன்று காலை 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை பறக்க விடுகிறார். காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் 25 துறைகளின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம்பெற உள்ளது. விழா நடைபெறவுள்ள மெரினா கடற்கரை சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • Republic day Live Updates: முப்படைகளின் அணிவகுப்பு

    டெல்லியில் நடைபெறும் முப்படைகளின் அணிவகுப்பை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்க உள்ளார். நாட்டின் பலத்தை காட்டும் வகையில் ராணுவம், கடற்படை, விமானப்படைகள் தங்களது அணிவகுப்பை பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர். இதுமட்டுமின்றி, பல மாநிலங்களின் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் விதத்தில் அந்தந்த மாநில ஊர்திகளும் இடம்பெற உள்ளது.

  • Republic day Live Updates: சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர்

    இந்த குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்கிறார். இதற்காக அவர் நேற்றே இந்தியா வந்துவிட்டார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பல முக்கிய அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் குடியரசு தின விழாவில் பங்கேற்கின்றனர். 

  • Republic day Live Updates: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

    குடியரசு தின அணிவகுப்பை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

  • Republic day Live Updates: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கொடியேற்றுகிறார்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பை ஏற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியேற்றுகிறார்.

     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link