புதுடெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் COVID-19 தொற்றையடுத்து, பல்வேறு சமூக ஊடக வலைத்தளங்களில் ஏராளமான போலி செய்திகளும் தவறான தகவல்களும் வெளிவந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், இணையத்தில் நாம் படிப்பவை அனைத்தும் உண்மையல்ல என்பதை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட செய்திகளை நம்புவதற்கு முன்பு அவற்றைச் சரிபார்ப்பது எப்போதும் நல்லது.


இப்படிப்பட்ட ஒரு செய்தியைக் கொண்ட ஒரு ட்வீட் வைரலாகி வருகிறது. இந்த ட்வீட்டில், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த டிசம்பர் 1 முதல் நாட்டில் மீண்டும் லாக்டௌன் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற எந்த அறிவிப்பும் அரசாங்கத்திடமிருந்து வரவில்லை.


ALSO READ: Corona-வுடனான போரில் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்புக்கு நன்றி: WHO தலைவர் பாராட்டு!!


சமூக ஊடகங்களில் பரவும் இத்தகைய கூற்றுக்களை மறுத்து, அரசாங்கத்தின் பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மை சோதனை பிரிவு, ட்வீட் மார்பிங் செய்யப்பட்டுள்ளது என்றும், தற்போது வரை அத்தகைய திட்டம் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை என்றும் கூறியது.



போலி செய்தி பற்றி தெளிபுபடுத்திய PIB, ஒரு ட்வீட்டில் ”ஒரு முக்கிய ஊடக நிறுவனம் வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு ட்வீட்டில், நாட்டில் COVID-19 தொற்று அதிகரித்து வருவதால், அரசு, டிசம்பர் 1 முதல் நாடு தழுவிய லாக்டௌனை மீண்டும் விதிக்கப் போகிறது என்று கூறியுள்ளது. இந்த ட்வீட் மார்பிங் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய முடிவு எதுவும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை” என்று தெளிவுபடுத்தியது.


இணையத்தில் நிலவும் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளைத் தடுப்பதற்காக பத்திரிகை தகவல் பணியகம் இந்த உண்மைச் சரிபார்ப்புக் குழுவை 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தியது. அதன் நோக்கம் "பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவி வரும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை அடையாளம் காண்பது" என்று PIB கூறியது.


இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் நம்பகமான ஆதாரங்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அரசாங்கம் மக்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.


ALSO READ: நாட்டின் முதல் கோவிட் ஆயுள் காப்பீட்டுக் கொள்கை அறிமுகம்... இதன் சிறப்பு என்ன?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR